in ,

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பிடனை சந்தித்த பிரதமர் கெய்ர் ஸ்டார்

அமெரிக்க வெள்ளை மாளிகையில் ஜனாதிபதி ஜோ பிடனை சந்தித்த பிரதமர் கெய்ர் ஸ்டார்

 

1. அமெரிக்க ஜனாதிபதி ஜோ பிடன்.., பிரிட்டனின் புதிய பிரதமர் கெய்ர் ஸ்டார்மரிடம், ஐரோப்பிய நாட்டின் நெருக்கமான உறவுகளை மேம்படுத்த வேண்டி தனது விருப்பத்தை தெரிவித்துள்ளது.

2. ஸ்டார்மர் புதன்கிழமை வெள்ளை மாளிகையின் அலுவலகத்தில் பிடனை சந்தித்தார், அங்கு இருவரும் இங்கிலாந்து மற்றும் அமெரிக்க உறவுகள், உக்ரைன் மற்றும் காசாவில் நடக்கும் போர்கள் மற்றும் யூரோ 2024 இன் அரையிறுதியில் இங்கிலாந்தின் கால்பந்து வெற்றி குறித்தும் விவாதித்தனர்.

3. ஐரோப்பிய நாட்டுடன் நெருங்கிய உறவுகளை ஏற்படுத்துவது மற்றும் AUKUS (Trilateral Security Partnership Between Australia, U.K. and U.S) பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா இடையேயான பாதுகாப்பு ஒப்பந்தத்தை பற்றியும் விவாதித்தனர்.

4. “உலகம் முழுவதும் வளர்ந்து வரும் சவால்களை நாம் எதிர்கொள்ளும் நேரத்தில், நாங்கள் ஒன்றிணைந்து ஒன்றாக வேலை செய்யும் போது நாங்கள் வலிமையாக இருக்கிறோம் என்பதை சுட்டிகாட்டினர்

5. ஸ்டார்மர் நேட்டோ உச்சிமாநாட்டிற்காக வாஷிங்டனில் இருந்தவர் அங்கு அவர் ஜெர்மனியின் ஓலாஃப் ஸ்கோல்ஸ் உள்ளிட்ட ஐரோப்பிய தலைவர்களையும் சந்தித்தார்.

6. 2016 ஆம் ஆண்டு பிரித்தானியாவின் பொது வாக்கெடுப்பில் இருந்து வெளியேரியத்தால் ஏற்பட்ட வெறுப்பைக் குறைக்கும் வகையில், பாதுகாப்பு மற்றும் வர்த்தகம் போன்ற துறைகளில் ஒத்துழைப்பை இனி மேம்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்துடன் பிரிட்டன் உறவுகளை புதுப்பிக்க வேண்டும் என்று ஸ்டார்மர் கூறியுள்ளார். இருப்பினும் European Union’s Single Market or Customs Union ..னில் மீண்டும் இணைவதற்கான எந்த நடவடிக்கையையும் அவர் எடுக்கவில்லை.

7. ரஷ்யாவுடனான போரில் உக்ரைனை ஆதரிப்பதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்ய வேண்டும் என்று இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர், மேலும் பணயக்கைதிகளை வெளியேற்றவும், உதவவும்  பாலஸ்தீன், இஸ்ரேல் இரு நாடும் தீர்வை நோக்கி முன்னேறவும் காசாவில் போர் நிறுத்தம் செய்வதற்கான கூட்டு முயற்சியை பற்றி விவாதித்தனர்.

What do you think?

இன்றைய தலைப்பு செய்திகள்

Cabinet of the United Kingdom of Great Britain and Northern Ireland