திமுகவை அழிப்பேன் ஒழிப்பேன் என வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசி வருகிறார்
நெல்லை மாநகர திமுக சார்பில் எல்லோருக்கும் எல்லாம், முதலமைச்சர் மு க ஸ்டாலின் பிறந்தநாள் விழா, நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் பேட்டை மல்லிமார் தெருவில் மாநகர செயலாளர் சுப்பிரமணியன் ஏற்பாட்டில் மத்திய மாவட்ட பொறுப்பாளர் டி.பி்.எம் மைதீன்கான் தலைமையில் நடைபெற்றது இந்த கூட்டத்தில் கலந்து கொண்ட ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் ஐ பெரியசாமி பேசுகையில்
திமுகவை அழிப்பேன் ஒழிப்பேன் என வரலாறு தெரியாமல் பிரதமர் மோடி பேசி வருகிறார். திமுகவிற்கான தனி வரலாறு உள்ளது. இந்தியாவில் உள்ள எந்த சக்கியாலும் திமுவை அழிக்க முடியாது , தமிழகத்திற்கான நிதியை கொடுக்காமல் மத்திய அரசு முடக்க நினைக்கிறது.
ஜிஎஸ்டி வரி செலுத்தும் முதன்மை மாநிலமாக இருக்கும் தமிழகத்தின் வரி வருவாய் ராஜஸ்தான், உத்திரபிரதேசம், குஜராத் போன்ற அனைத்து தவறுகளும் செய்யும் மாநிலங்களுக்கு மத்திய அரசு பிரித்து கொடுப்பது நியாயமா என்பதை மக்கள் சொல்ல வேண்டும் என நெல்லையில் நடைபெற்ற எல்லோருக்கும் எல்லாம் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்ட அமைச்சர் ஐ பெரியசாமி தெரிவித்துள்ளார்.