in

வத்திராயிருப்பு அருகே தனியார் பஸ்கள் மோதல்


Watch – YouTube Click

வத்திராயிருப்பு அருகே தனியார் பஸ்கள் மோதல்

ஶ்ரீ வில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பில் இருந்து கூமாப்பட்டி செல்லும் சாலையில் மூலக்கரை பெரியகுளம் கண்மாய் சாலையில் கூமாப்பட்டியில் இருந்து வத்திராயிருப்பு நோக்கி பயணிகளை ஏற்றிக்கொண்டு தனியார் பேருந்து வந்து கொண்டிருந்தது.

அப்பொழுது வத்திராயிருப்பில் இருந்து கூமாபட்டி நோக்கி சிவகாசியில் இயங்கக் கூடிய தனியார் பட்டாசு ஆலையில் பணிகளை முடித்துக் கொண்டு பணியாளர்களை இறக்கி விடுவதற்காக பட்டாசு ஆலை பஸ் கூமாபட்டி மூலக்கரை பெரியகுளம் கண்மாய் சாலையில் வந்து கொண்டிருந்த பொழுது எதிர்பாராத விதமாக பட்டாசு ஆலை பஸ் பிரேக் சரிவர இயங்காததால் இரண்டு பஸ்களும் நேருக்கு நேர் மோதியதில் தனியார் பஸ்லில் பயணம் செய்த மற்றும் பட்டாசு ஆலை பஸ்ஸில் பயணம் செய்த பயணிகள் விபத்திற்கு உள்ளனர்.

இந்த விபத்தில் 15க்கும் மேற்பட்டோருக்கு சிறுசிறு காயங்கள் ஏற்பட்டது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த வத்திராயிருப்பு மற்றும் கூமாபட்டி போலீசார் விபத்தில் சிக்கிய பயணிகளை மீட்டு சிகிச்சைக்காக வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் விபத்தில் சிக்கிய பயணிகளுக்கு வத்திராயிருப்பு அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அளிக்கப்பட்டது. கூமாபட்டிக்கு செல்லக்கூடிய மூலக்கரை சாலையில் இருபுரமும் பெரியகுளம் மற்றும் வீராகசமுத்திரம் கண்மாய்கள் அமைந்து உள்ளது.

விபத்துக்குள்ளன பஸ் கண்மாய்க்குள் கவிழ்ந்திருந்தால் பெரும் உயிர் சேதம் ஏற்பட்டிருக்கும். நல்வாய்ப்பாக பஸ் கண்மாய்க்குள் விளாமல் தடுப்பில் மோதி நின்றதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. இச்சம்பவம் குறித்து கூமாபட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


Watch – YouTube Click

What do you think?

பாராளுமன்றம் சென்று தயிர்சாதம் சாப்பிடும் காங்கிரஸ் வேட்பாளருக்கு எதற்காக ஓட்டளிக்க வேண்டும்

நூதன முறையில் வாக்கு சேகரித்த நாம் தமிழர் வேட்பாளர்