ராஜமௌலியின் SSMB29 படத்திற்கு பிரியங்கா சோப்ரா கேட்ட சம்பளம்..மிரண்ட இயக்குனர்
RRR படத்தின் வெற்றிக்கு பிறகு எஸ்.எஸ். ராஜமௌலியின் அடுத்த படம் SSMB29, மகேஷ் பாபு மற்றும் பிரியங்கா சோப்ரா ஜோனாஸ் நடிக்கும் இப்படத்தில் பிரிதிவிராஜ் முக்கிய கதாபத்திரத்தில் நடிக்கிறார்.
ஜான் ஆபிரகாம் வில்லனாக நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படத்தின் சூட்டிங் தற்போது அமெரிக்காவில் நடைபெற்றுக் கொண்டிருக்கும் நிலையில், பிரியங்கா சோப்ரா கேட்ட Amount தான் ராஜமௌலி…யை அதிர்ச்சியடைய வைத்திருகிறது.
பிரியங்கா சோப்ரா நிக் ஜோனஸ் ….சை திருமணம் செய்த பிறகு அமெரிக்காவில் செட்டிலாகி விட்டார். இவர் ஹாலிவுட் தொடரான குவாண்டிகோ தொடரின் ஹிட்..டுக்கு பிறகு ஹாலிவுட் படங்கலில் பிஸியாகி விட்டார்.
பிரியங்கா சோப்ரா நீண்ட இடைவேளைக்குப் பிறகு மீண்டும் இந்திய படத்தில் நடிக்க. ₹30 கோடி சம்பளம் கேட்டிருகிறார், இது உறுதி செய்யப்பட்டால், இந்திய சினிமாவில் அதிக சம்பளம் வாங்கும் நடிகையின் பட்டியலில் இவருக்கு தான் முதலிடம்.
ஏனென்றால் தீபிகா படுகோனே சமீபத்திய படங்களுக்கு ₹20 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார்.
SSMB29 படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் அலுமினிய தொழிற்சாலையில் தொடங்கியது, கென்யாவின் காடுகள் உட்பட முக்கிய காட்சிகளை படமாக்க திட்டமிடப்பட்டுள்ளது.
சுமார் ₹1000 கோடி பட்ஜெட்டில் தயாரிக்கப்படுவதால், மீண்டும் எல்லோரின் பார்வையும் ராஜமௌலி பக்கம் திரும்பி உள்ளது.