in

மாநில அளவிலான ஆண்கள் பெண்கள் கைப்பந்து போட்டியின் பரிசு வழங்கும் விழா


Watch – YouTube Click

மாநில அளவிலான ஆண்கள் பெண்கள் கைப்பந்து போட்டியின் பரிசு வழங்கும் விழா

 

புதுச்சேரி கூடப்பாக்கம் கிராமத்தில் 36 ஆம் ஆண்டு மாநில அளவிலான ஆண்கள் பெண்கள் கைப்பந்து போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

புதுச்சேரி அடுத்த கூடப்பாக்கம் கிராமத்தில் குலோத்துங்க சோழன் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் 36 ஆம் ஆண்டு மாபெரும் மாநில அளவிலான ஆண்கள் மற்றும் பெண்கள் கலந்து கொள்ளும் கைப்பந்து போட்டி நடைபெற்றது.

தமிழக ஆண்கள் அணி, புதுச்சேரி பெண்கள் அணி என மூன்று பிரிவுகளின் கீழ் மூன்று நாட்கள் நடந்த கைப்பந்து போட்டியில் ஒவ்வொரு அணியின் வீரர்களும் தங்களுடைய திறமைகளை வெளிப்படுத்தி விளையாடி வந்தனர் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இதில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட குலோத்துங்க சோழன் இளைஞர் நற்பணி மன்ற தலைவர் அய்யனார் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி கௌரவித்தார்.

அதன்படி, பெண்கள் பிரிவில் வெற்றி பெற்ற மாறன் அணிக்கு 15000 முதல் பரிசும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.

இதேபோல் ஆண்கள் பிரிவில் வெற்றி பெற்ற குலோத்துங்க சோழன் அணிக்கு முதல் பரிசான 15 ஆயிரம் ரூபாய் ரொக்கம் மற்றும் சுழற் கோப்பையும் வழங்கப்பட்டது.

இரண்டாவது பரிசை ஆண்கள் பிரிவில் வம்பு பட்டு ஏபிஜே அணி தட்டிச் சென்றது. பரிசளிப்பு விழாவில் ஏராளமான பொதுமக்கள் கைப்பந்து வீரர்கள் என திரளாக கலந்து கொண்டனர்.


Watch – YouTube Click

What do you think?

முதல் குற்றவாளி எடப்பாடி பழனிச்சாமி தான் அமைச்சர் மா சுப்பிரமணியன் பகீர் குற்றச்சாட்டு

2024 க்கு பிறகு ஆயுள் கைதியாக தான் பிரதமர் மோடி இருப்பார்