in

பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக நுழைந்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

பிக் பாஸ் சீசன் 8ல் போட்டியாளராக நுழைந்திருக்கிறார் தயாரிப்பாளர் ரவீந்திரன்.

சிலர் இவரெல்லாம் வேலைக்கு ஆக மாட்டார் சுத்த வேஸ்ட் அப்படின்னு கமெண்ட் செய்திருக்கின்றனர். sportive…வாக எடுத்துக் கொண்ட ரவீந்திரன், பிக் பாஸ் …வீட்டில் நுழைவதற்கு முன் வீடியோ ஒன்றை வெளியிட்டு இருக்கிறார்.

இவன் எல்லாம் பிக் பாஸ் வீட்டுக்குள் சென்று என்னத்த சாதிக்க போகிறான் என்றுதானே நினைக்கிறீர்கள் என் உருவத்தை பார்த்து எடை போடாதீர்கள்.

என்னுடைய இன்னொரு முகத்தை நான் பிக் பாஸ் வீட்டில் காட்டப் போகிறேன். நான் செம காமெடி மனிதர் பா... என்ன இந்த உடம்பு வச்சிட்டு பிக் பாஸ் வீட்டுக்குள்ள பாத்திரம் கழுவுவது பாத்ரூம் கழுவுவதும் வெங்காயம் வெட்டுவது கொஞ்சம் கஷ்டம்தான் ஆனா கஷ்டப்படாம எதுவும் கிடைக்காது பாஸ்.

நிச்சயமா நான் ஒரு நல்ல என்டர்டைனர்…ராக இருப்பேன் அதுக்கு கேரண்டி என்னைக்குமே நான் போட்டியை பார்த்து பயந்ததில்லை அங்கு ஜெயிப்பதற்கான சந்தர்ப்பம் இருந்தால் நிச்சயம் ஒரு கை பார்த்து விடுவோமே என்று இறங்குவேன் Bigg Boss …க்கும் எனக்கும் என்ன சம்மதம் இருக்குன்னு கேக்குறீங்களா கொஞ்சமா நஞ்சமா, நான் Bigg Boss 2 ..வில் இருந்து சென்ற சீசன் வரை Reviewer…ராக இருந்திருக்கின்றேன்.

எத்தனை பேரை நான் கழுவி ஊத்திருப்பேன், வச்சு செஞ்சுருக்கேன் இப்ப என்னை எல்லாரும் வச்சு செய்வாங்க….? செஞ்சிட்டு போங்க அதை பத்தி எனக்கு கவலை இல்லை எவ்வளவு என்னை வறுக்கணுமோ, ரோஸ்ட் பண்ணனுமோ…பண்ணுங்க எனக்கு அதுல வருத்தமே இல்லப்பா நம்மள வெறுத்து ஒதுக்குற கூட்டத்துக்கு பதில் சொல்றதுக்கு பதில் நம்பல நேசிக்கிற கூட்டத்தை நாம சந்தோஷமா வேச்சிகுவோம்.

இந்த உடம்பை வச்சுக்கிட்டு என்ன பண்றதுன்னு யோசிக்கதை விட நம்மளால எல்லாம் முடியும் நான் பாசிட்டிவா நினைக்கிறேன். Reviewer…ராக இருந்த நான் அவங்களுல் ஒருத்தனா உள்ள போயி விளையாடி பார்க்க முடிவு பண்ணிடேன் நிச்சயமா என்னால முடிஞ்ச பெஸ்ட்டை கொடுப்பேன் நினைக்கிறேன் .

Fatman ரவீந்தர் ரசிகர்களோடு ஆதரவு கிடைக்கும் அப்படின்னு நினைச்சு உள்ள நுழைஞ்சு இருக்கிறார். பார்போம் போன வேகத்துல திரும்பி வராம இருந்தா பரவாஇல்லை.

What do you think?

ராஜா ராணி 3 சீரியல் விரைவில் வரப்போவதாக அறிவிப்பு

காங்கிரஸ் கவுன்சிலர் மீது திமுக துணை சேர்மனின் கணவர் தாக்கு