in

முறை பெண்ணை திருமணம் செய்ய தடை


Watch – YouTube Click

முறை பெண்ணை திருமணம் செய்ய தடை

உத்தரகாண்ட் மாநிலத்தில் கொண்டு வரப்பட்டுள்ள பொது சிவில் சட்டத்தின்படி 74 உறவு முறைகள் தடை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் பொது சிவில் சட்டத்தை அமல்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது. இதற்கான பணிகளைச் சட்ட ஆணையம் மேற்கொண்டு வருகிறது.

இந்த நிலையில், உத்தரகாண்ட் மாநில பா.ஜ.க அரசு, பொது சிவில் சட்ட மசோதாவை உருவாக்க, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு குழுவை அமைத்தது.

அந்தக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் அம்மாநில சட்டப்பேரவையில் நேற்று பொது சிவில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

அதில் பல உறவு முறைகள் தடை செய்யப்பட்ட திருமண உறவு முறைகளாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, உத்தரகாண்டில் இனி ‘அத்தை / மாமன் முறை மகன் – மகளை’ திருமணம் செய்ய முடியாது.

இந்த சட்டத்தின்படி, பலதார திருமணத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும், மறுமணம், விவாகரத்து குறித்த பொது விதிகள் அமலுக்கு வருகின்றன. அதேபோல், திருமணங்களைப் போன்று, லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்து கொள்வது கட்டாயாமாகிறது.

தவறுவோர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. லிவ்-இன் உறவில் இருக்க விரும்புவோரும் அரசிடம் பதிவு செய்ய தவறினால் 6 மாதம் சிறை தண்டனை மற்றும் 25,000 அபராதம் செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

புதுச்சேரி கடற்கரை மற்றும் சங்கராபரணி ஆற்றங்கரையில் ஏராளமானோர் தர்ப்பணம்

உத்தரகாண்டில் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக கலவரம்