in

அதிக சத்தம் எழுப்பும் ஊது குழல்கள் விற்பனை செய்ய தடை


Watch – YouTube Click

அதிக சத்தம் எழுப்பும் ஊது குழல்கள் விற்பனை செய்ய தடை

 

பிரசித்தி பெற்ற திருவாரூர் தியாகராஜர் கோவில் பங்குனி உத்திரத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான உலக புகழ்பெற்ற ஆழித் தேரோட்டம் மார்ச் 21ம் தேதி நடைபெறவிருக்கிறது.

அதனை முன்னிட்டு மாவட்ட காவல்துறை சார்பில் செய்யப்பட்டுள்ள விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஜெயக்குமார் திருவாரூர் நகர காவல் நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார்.அப்போது அவர் கூறியதாவது.

இந்த தேர் திருவிழாவை முன்னிட்டு ஒரு காவல் கண்காணிப்பாளர் 3 கூடுதல் காவல் கண்காணிப்பாளர் 19 துணை காவல் கண்காணிப்பாளர் உள்ளிட்ட 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.அதில் குற்றச் செயல்களை தடுக்கும் பொருட்டு 10 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

அந்த குழுவில் சாதாரண உடையில் 100 காவலர்கள் இருப்பார்கள். அதுமட்டுமில்லாமல் ஒரு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் உட்பட 150 காவலர்கள் போக்குவரத்தை ஒழுங்கு படுத்துவது மற்றும் வாகனம் நிறுத்துமிடங்களை கண்காணிப்பது போன்ற பணிகளை செய்வார்கள்.

மேலும் கனரக வாகனங்கள் அன்றைய தினம் திருவாரூர் நகர் பகுதிக்குள் அனுமதிக்கப்படாது.மேலும் குற்ற செயல்களை தடுக்கும் விதமாக ஆங்காங்கே சிசிடிவி கேமராக்கள் மற்றும் ட்ரோன் மூலமும் கண்காணிக்கப்படுகிறது.அது மட்டுமல்லாமல் தேரோடும் நான்கு வீதிகளிலும் நான்கு காவலர் உதவி மையங்கள் அமைக்கப்பட உள்ளது.

அதில் குற்ற செயலை தடுக்கும் பொருட்டு பெண்களுக்கு அறிவுரைகள் ஒலிபெருக்கி மூலம் வழங்கப்படும்.அதே போன்று சேஃப்டி பின் எனப்படும் ஊக்கு வழங்கப்படும். மேலும் குழந்தைகளின் கைகளில் தாய் தந்தையரின் செல்போன் எண்கள் எழுதப்பட்டு பேண்ட் அணிவிக்கப்படும். ஒரு சமயம் குழந்தைகள் தொலைந்து போனால் அந்த எண் மூலம் பெற்றோர்களை தொடர்பு கொள்ள அது ஏதுவாக இருக்கும்.

மேலும் அன்றைய தினம் பதினோராம் வகுப்பு அரசு பொது தேர்வு நடைபெற இருப்பதால் மாணவர்களுக்கு எவ்வித சிரமமும் ஏற்படாமல் இருப்பதற்காக எந்தெந்த இடத்தில் போக்குவரத்து தடுக்கப்படுகிறதோ அந்த இடத்தில் உள்ள காவலர்களுக்கு மாணவ மாணவிகளை அனுமதிக்க அறிவுறுத்தியுள்ளோம்.

அதனால் இரு சக்கர வாகனத்திலேயே தாராளமாக வந்து எந்த தடையும் இன்றி தேர்வு மாணவ மாணவிகள் தேர்வு எழுதலாம் .சென்ற ஆண்டை போல இந்த வருடமும் அதிக ஒலி எழுப்பும் ஊது குழல்கள் விற்பனை தடை செய்யப்படும். மீறி விற்பனை செய்தால் ஊது குழல்கள் பறிமுதல் செய்யப்பட்டு திருவிழா முடிந்த பின்பு விற்பனையாளர்களிடம் ஒப்படைக்கப்படும்.

தஞ்சாவூர் திருவாரூர் நாகப்பட்டினம் மயிலாடுதுறை மாவட்டங்களைச் சேர்ந்த காவல்துறையினர் இந்த தேர்த் திருவிழாவில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். தியாகராஜர் கோவிலுக்கு சொந்தமான கமலாலய குளக்கரையில் ஒரு துணை காவல் கண்காணிப்பாளர் தலைமையில் காவலர்கள் மற்றும் தீயணைப்பு வீரர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

மேலும் தீயணைப்பு துறை சார்பில் மூன்று படகுகளும் காவல்துறை சார்பில் ஒரு படகும் தயார் நிலையில் அங்கு நிறுத்தி வைக்கப்படும்.அதேபோன்று குளத்தில் யாரும் இறங்காத வண்ணம் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.


Watch – YouTube Click

What do you think?

ஐஸ்லாந்தில் வெடித்துச் சிதறிய எரிமலை

தூத்துக்குடி – மேட்டுப்பாளையம் இடையே புதிய ரயில் சேவை