அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம்
சட்டம் மேதை அம்பேத்கரை அவமதித்த ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ரயில் மறியல் போராட்டம் – போராட்டக்காரர்கள் காவல்துறையினர் தள்ளுமுள்ளு – போராட்டக்காரர்கள் கைது
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் அம்பேத்கரை பேசுவது பேஷன் ஆகிவிட்டது அம்பேத்கர் என்பதற்கு பதில் கடவுளை பெயரைச் சொன்னால் சொர்க்கத்தில் இடம் கிடைக்கும் என சட்டமேதை அம்பேத்கரை அவமதிக்கும் வகையில் பதிவிட்ட ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் கிழக்கு மாநகர மாவட்ட செயலாளர் கனியமுதன் தலைமையில் திருச்சி ஜங்ஷன் ரயில் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ரயில் நிலையத்திற்கு உள்ளே நுழைய முயன்ற போராட்டக்காரர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தியதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
இதனை தொடர்ந்து மறியலில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.
இந்த மறியல் போராட்டத்தில் தொழிலாளர் விடுதலை முன்னணியின் மாநில துணைச் செயலாளர் பிரபாகரன், மகளிர் அணி நிர்வாகி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.