செஞ்சி அருகே உயர்மட்ட பாலம் அமைக்கும் பணிக்கு ஈடுபட்ட பொதுமக்களுக்கு கூலி வழங்காத ஒப்பந்ததாரரை கண்டித்து முற்றுகை போராட்டம்
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே ரெட்டிபாளையம் கிராமத்திலிருந்து வடபாலை சாலையில் ரூபாய் 2 கோடி மதிப்பில் உயர்மட்ட மேம்பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வரும் நிலையில் ரெட்டிபாளையம் கிராமத்தை சேர்ந்த பொதுமக்களை நாமக்கல் பகுதியை சேர்ந்த ஒப்பந்தார் கோபி என்பவர் பணிக்கு அமர்த்தி உள்ளார்.
இந்நிலையில் பணி செய்த பொதுமக்களுக்கு உரிய கூலி தராமல் ஒப்பந்தாரர் காலதாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் ஒப்பந்தாரர் தனக்கு சொந்தமான கட்டுமான பொருட்களை லாரி மூலம் மற்றொரு இடத்திற்கு கொண்டு செல்ல முயன்ற போது பாதிக்கப்பட்ட பொதுமக்கள் தங்களுக்கு உரிய கூலியை வழங்க கோரி லாரியை முற்றுக்கையிட்டு போராட்டம் நடத்தினார்கள்.
இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் அறிந்து வந்த சத்தியமங்கலம் காவல் ஆய்வாளர் ஹரிகிருஷ்ணன் விரைந்து வந்து பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதன் பேரில் போராட்டம் கைவிடபட்டது.