குடிநீர் இணைப்பு வழங்காததை கண்டித்து காத்திருப்பு போராட்டம்
நாகை மாவட்டம் வேதாரண்யத்தை அடுத்த வண்டுவாஞ்சேரி ஊராட்சியில் பம்ப் ஹவுஸ் அருகே வசித்து வரும் பட்டியல் இன மக்களுக்கு இதுவரை குடிநீர் இணைப்பு தராமல் அலட்சியம் காட்டி வரும் ஊராட்சி நிர்வாகத்தை கண்டித்து இந்திய மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியைச் சார்ந்தவர்கள் வண்டுவாஞ்சேரி கிளைக் கழக செயலாளர் சேகர் தலைமையில் காத்திருப்பு போராட்டம் செய்து வருகின்றனர்.
இந்தப் பகுதி மக்கள் மாவட்ட ஆட்சியர், வட்டாட்சியர், ஊராட்சி ஒன்றிய ஆணையர் என அனைத்து துறை அதிகாரிகளிடமும் பல முறை மனு அளித்தும், பல போராட்டங்களை நடத்தியும் இது வரை குடிநீர் வசதி, சாலை வசதி, மின்சார வசதி என எதனையும் செய்து கொடுக்காததை கண்டித்து துளசியப்பட்டினம் வளவனாறு பாலம் அருகில் காத்திருப்பு போராட்டத்தை மேற்கொண்டு வருகின்றனர்.