தமிழக அரசின் இந்து அறநிலைய ஆட்சித் துறையை கண்டித்து தர்ணா போராட்டம்
தமிழக அரசின் இந்து அறநிலைய ஆட்சித் துறையை கண்டித்து, இணை ஆணையர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அடிபனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் தர்ணா போராட்டம், நூற்றுக்கணக்கானோர் பங்கேற்பு.
தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்கள் மடம் அறக்கட்டளைகள் மற்றும் வகுப்பு அரிய சொத்துக்கள் தேவாலயங்களின் அடிமனைகளில் குடியிருப்பவர்கள் சிறு கடை வைத்திருப்போர் விவசாய நிலங்களில் பல தலைமுறையாக உள்ளவர்களை வெளியேற்றுவதற்கு தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
கடந்த காலத்தில் பகுதி கட்டணம் வசூலிக்கப்பட்டு இருந்ததை வாடகையாக மாற்றி அதையும் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நிலத்தின் சந்தை மதிப்பின்படி சதுர அடி கணக்கில் வாடகை நிர்ணயம் செய்யும் புதிய நடவடிக்கையை இந்து சமய அறநிலையத்துறை எடுத்து வருகிறது கட்ட முடியாத ஏழை விவசாயிகள் சிறு குறு வணிகர்களை குத்தகை உரிமையை பறித்து நிலத்தை பறித்து விடுகிறது.
இதனை கண்டித்தும் அறநிலைய சட்டப்படி 34 ன் படி வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்களுக்கு இலவசமாகவும், மற்றவர்களுக்கு நியாயமான விலையை நிர்மாணத்தும் கிரைய பட்டா வழங்க வேண்டும், வாடகை நிர்ணயம் செய்வதை உறுதி செய்ய வேண்டும் விவசாயிகளின் குத்தகை உரிமையை பறித்து மறு ஏலம் என்ற பெயரில் ஏலம் இடம் நடவடிக்கையை கைவிட வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அடிமனை பயனாளிகள் குத்தகை விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
மயிலாடுதுறை அடுத்த சித்தர் காடு இந்து அறநிலையத்துறை இணை ஆணையர் அலுவலகம் முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட தலைவர் ராயர் தலைமை தாங்கினார் மாநில தலைவர் சாமி நடராஜன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார்.
நூற்றுக்கணக்கான சங்க உறுப்பினர்கள் பங்கேற்று தமிழக அரசை கண்டித்தும் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தியும் கண்டன குரல்களை எழுப்பினர்.