in

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

 

கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பனந்தாள் காவல்துறை ஆய்வாளர் கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கும்பகோணத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் காவல் ஆய்வாளர் கரிகால சோழன் திருப்பனந்தாள் பகுதியை சேர்ந்த வழக்கறிஞர் பொன்ராஜ், வழக்கு சம்பந்தமாக திருப்பனந்தாள் காவல் நிலையத்தில் பேசிய போது காவல்துறை ஆய்வாளர் கரிகால சோழன், வழக்கறிஞர் பொன்ராஜ் தரைக்குறைவாக பேசியதாக கூறப்படுகிறது.

இதனை கண்டித்து நீதிமன்றம் வளாகம் முன்பு நீதிமன்ற புறக்கணிப்பு செய்து காவல்துறை ஆய்வாளரை கண்டித்து வழக்கறிஞர் சங்கத் தலைவர் விவேகானந்தன், தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் சங்க செயலாளர் செந்தில் ராஜன், பொருளாளர் ராஜா சீனிவாசன், முன்னாள் சங்கத் தலைவர்கள் ராஜசேகர், சங்கர், வழக்கறிஞர்கள் மோகன்ராஜ், பாலமுருகன், ஐயப்பன், கர்ணன், மற்றும் வழக்கறிஞர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு கண்டன முழக்கங்களை எழுப்பினார்கள்.

What do you think?

மண்ணுலகை மட்டுமல்ல விண்ணுலகை ஆளக்கூடியவர்கள் பெண்கள்

அழிந்து வரும் சிட்டுக்குருவி இனத்தை பாதுகாக்க உலக சிட்டுக்குருவி தினம்