சம ஊதியம் வழங்கவும் பணி நிரந்தரம் செய்யக்கோரி அலுவலக வாசலில் தர்ணா போராட்டம்
காரைக்கால் நலவழித் துறையில் பணிபுரியும் NRHM ஊழியர்கள் சம வேலைக்கு சம ஊதியம் வழங்கவும் பணி நிரந்தரம் செய்யக்கோரி அலுவலக வாசலில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தேசிய சுகாதார இயக்கத்தின் கீழ் NRHM ல் பல்வேறு பிரிவுகளில் சுமார் 750 க்கும் மேற்பட்ட ஊழியர்கள் பணிபுரிந்து வருகின்றனர். நீ ஊழியர்கள் நிரந்தர ஊழியருக்கு இணையாக மருத்துவத்துறையில் குறைந்த ஊதியத்தில் 25 ஆண்டுகளுக்கு மேலாக பணிபுரிந்து வருகின்றனர்.
மேலும் விலைவாசி உயர்வு பணிச்சுமை என எவ்வளவோ பிரச்சனைக்கிடையும் பணிபுரிந்து வரும் தங்களுக்கு எந்தவித ஊதிய உயர்வும் இல்லாமல் பணியாற்றி வரும் இவர்கள் தங்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த 15 ஆண்டுகளாக போராட்டம் நடத்தியும் மாநில அரசு இவர்களின் கோரிக்கையான சம வேலைக்கு சம ஊதியம் மற்றும் பணி நிரந்தரம் இவற்றிற்கு செவி சாய்க்காத புதுச்சேரி அரசை கண்டித்து இன்றிலிருந்து தொடர் வேலை நிறுத்த போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இவர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வலியுறுத்தி புதுச்சேரி, காரைக்கால், மற்றும் மாகி, ஏனம் ஆகிய பிராந்தியங்களில் துணை இயக்குனர் நலவழித்துறை அலுவலகத்தில் அமைதி போராட்டத்தை நடத்தி வருகின்றனர்.
தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை இந்த போராட்டம் தொடரும் என தெரிவித்துள்ளனர்.