100 நாள் வேலைத் திட்ட நகலை எரித்து போராட்டம்
100 நாள் வேலைத் திட்டத்தில் ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனை நடைமுறை சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து விவசாய தொழிலாளர் சங்கத்தினர் தேவூர் தபால் நிலையம் முன்பு உத்தரவு நகலை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
மத்திய அரசின் மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதிட்டம் மூலமாக கிராம புற மக்களுக்கு 100 நாள் வேலை வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் மத்திய அரசு பலவேறு திருத்தங்களை செய்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக 100 நாள் வேலைத்திட்டத்தில் பயன் பெறும் தொழிலாளர்களின் ஆதார் எண்களை இணைத்து பரிவர்த்தனையை முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்த திட்டத்தால் கோடி கணக்கான தொழிலாளர்களை வெளியேற்றி 100 நாள் வேலை திட்டத்தை சீர்குலைக்கும் அபாயத்தை கண்டித்து மத்திய அரசு அலுவலங்களில் முன்பாக தமிழகம் முழுவதும் அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் நகல் எரிப்பு போராட்டம் நடைப்பெற்று வருகிறு.
அதன் ஒரு பகுதியாக தேவூர் தபால் நிலையம் முன்பு விவசாய தொழிலாளர் சங்கத்தினர் உத்தரவு நகல் எரிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
அகில இந்திய துணைத்தலைவர் லாசர் தலைமையில் நடைப்பெற்ற போராட்டத்தில் ஆதார் இணைப்புடன் கூடிய பரிவர்த்தனையை திரும்ப பெற வேண்டும், அனைவருக்கும் வேலை வழங்க வேண்டும், சம்பள பாக்கியை உடனே வழங்க வேண்டும், நிறுத்தப்பட்ட அனைத்து ஊராட்சிகளிலும் உடனடியாக வேலையை துவங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்களை வலியுறுத்தி கண்டன முழக்கங்களை எழுப்பினர். தொடர்ந்து உத்தரவு நகலை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டதால் பரப்பரப்பு ஏற்பட்டது. இதில் 100 க்கும் மேற்பட்டோர் கலந்துக் கொண்டனர்.