பாபர் மசூதி இடிப்பு தினத்தை கருப்பு நாளாக அனுசரித்து நெல்லை மேலப்பாளையம் பகுதியில் சுமார் 1500க்கும் மேற்பட்ட கடைகளை அடைத்து போராட்டம். 350 க்கும் மேற்ப்பட்ட ஆட்டோ,வாடகை வேன்,கார் உள்ளிட்டவைகளும் இயக்காததால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பு.
1992 ஆம் ஆண்டு பாபர் மஸ்ஜித் இடிக்கப்பட்டதை ஆண்டுதோறும் இஸ்லாமியர்கள் கருப்பு நாளாக அனுசரித்து வருகின்றனர் அன்றைய தினம் பல்வேறு போராட்டங்களையும் இஸ்லாமிய அமைப்பினர் நடத்தி வருகின்றனர் அந்த வகையில் நெல்லை மாவட்டத்தில் இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியான மேலப்பாளையம் பகுதியில் பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை கருப்பு நாளாக ஆண்டுதோறும் அனுசரித்து வருகின்றனர் அதன்படி மேலப்பாளையம் பகுதியில் உள்ள அனைத்து அரசியல் இயக்கங்கள் வணிகர் சங்கங்கள் ஜமாத் சார்பில் ஒரு நாள் கடையடைப்பு போராட்டம் நடந்து வருகிறது அதன்படி நெல்லை மேலப்பாளையம் வி எஸ் டி சாலை, கொட்டிக்குளம் சாலை, பஜார் திடல், நேதாஜி சாலை உள்ளிட்ட மேலப்பாளையத்தில் பல்வேறு பகுதிகளில் இயங்கும் சுமார் 1500 க்கும் மேற்பட்ட கடைகள் அடைக்கப்பட்டுள்ளது அதேபோல் மேலப்பாளையம் பகுதிகளில் இயக்கப்படும் சுமார் 300-க்கும் மேற்பட்ட ஆட்டோக்கள் 100க்கும் மேற்பட்ட வாடகை வேன் மற்றும் கார்களும் இன்றைய தினம் போராட்டத்திற்கு ஆதரவாக இயக்கப்படாமல் இருந்து வருகிறது இதன் காரணமாக பொது மக்களின் இயல்பு வாழ்க்கை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது.
பாபர் மஸ்ஜித் இடிப்பு தினத்தை ஒட்டி நெல்லை மாநகர காவல் ஆணையாளர் உத்தரவுப்படி பாளையங்கோட்டை மேலப்பாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளிலும் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்கள் மசூதிகள் தேவாலயங்கள் கோவில்கள் அரசு அலுவலகங்கள் என பல்வேறு பகுதிகளில் சுமார் 1000 திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.