in

காவிரி ஆற்றின் உள்ளே இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம்

காவிரி ஆற்றின் உள்ளே இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம்

 

மயிலாடுதுறையில் ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு ஒருபுறம் இடிந்து விழுந்த காவிரி பாலத்தை கட்டி தராத திமுக நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும் பொதுமக்கள் காவிரி ஆற்றின் உள்ளே இறங்கி கண்டன ஆர்ப்பாட்டம் செய்தனர்.

மயிலாடுதுறை திருமஞ்சன வீதியில் காவிரி ஆற்றின் குறுக்கே, ஒன்றாவது வார்டு மற்றும் எட்டாவது வார்டை இணைத்து வகையில் போக்குவரத்திற்காக கடந்த 2001 ஆம் ஆண்டு சிமெண்ட் நடைபாலம் அமைக்கப்பட்டது.

இந்த பாலம் சேதம் அடைந்து பாலத்தின் மையப்பகுதியின் ஒருபக்கம் 5 ஆண்டுகளுக்கு முன் இடிந்து விழுந்தது. இதனால். காவிரி ஆற்றின் மறுபுறம் உள்ள தோப்புத் தெரு பொட்டவெளி மாப்பொடுகை உள்ளிட்ட பகுதிகளைச் சேர்ந்த 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு வாசிகள் மாணவ மாணவிகள் தினமும் . பள்ளிகளுக்கு செல்லும் மாணவர்கள் இந்த பாலம் இல்லாத காரணத்தால் இரண்டு கிலோமீட்டர் தூரம் சுற்றுப்பாதையில் செல்ல வேண்டிய நிலைமை உள்ளது. சுற்றுப்பாதையில் உள்ள தீப்பாய்ந்தஅம்மன் கோயில் பாலத்தில் இரவு நேரங்களில் மது அருந்துவோர் தொல்லை இருப்பதால் பெண்கள் அவ்வழியே செல்ல அச்சப்பட்டு காவிரி ஆற்றின் உள்ளே தண்ணீர் இல்லாத சமயத்தில் ஆற்றை பயன்படுத்தி சென்று வருகின்றனர்.

இந்த பாலத்தை சீரமைப்பதற்கு 18 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட நிலையில் அந்த நிதியை மயிலாடுதுறை நகராட்சி வேறு பணிகளுக்கு விடப்பட்டது.

சேதம் அடைந்த பாலத்தை அகற்றி, புதிய பாலம் அமைத்துதர வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் பொதுப்பணித்துறை சார்பில் இந்த பாலம் கட்ட வேண்டும் என தெரிவிப்பதாகவும், பொதுப்பணித்துறையினர் இதற்கு மறுப்பு தெரிவித்து நகராட்சி நிர்வாகம் இந்த பாலத்தை சீரமைக்க வேண்டும் என்றும் ஒருவருக்கு ஒருவர் மக்களை அலைக்கழித்து வருகின்றனர்.

பாலம் இல்லாத காரணத்தால் பள்ளிகளுக்கு செல்லும் மாணவ மாணவிகளும் வேலைக்காக செல்லும் பொதுமக்களும் மிகுந்த அவதி அடைந்து உள்ளதால் பாலத்தை உடனடியாக கட்டி தர வலியுறுத்தியும், பாலத்திற்கு ஒதுக்கப்பட்ட பணத்தை வேறு பணிகளுக்கு திருப்பி விட்ட நகராட்சி நிர்வாகத்தை கண்டித்தும், இந்த பிரச்சனையில் தீர்வு எதுவும் ஏற்படுத்தாத மயிலாடுதுறை காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினரை கண்டித்தும் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் மற்றும் பொதுமக்கள் காவிரி ஆற்றுக்குள் இறங்கி கண்டன ஆர்ப்பாட்டங்களை எழுப்பினர்.பாலத்தை கட்டி தராவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாக தெரிவித்துள்ளனர்.

What do you think?

மதுரை வந்து டெல்லி செல்லும் பிரதமர் மோடிக்கு பலத்த பாதுகாப்பு

பெருமாள் முத்துப்பல்லக்கில் எழுந்தருளும் ஐதீக விழா