மதுரையில் தமிழக ஆளுநருக்கு 1000 அஞ்சல் அனுப்பி நூதன போராட்டம்
தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தையைப் இடம்பெறாததை கண்டித்து மதுரையில் தமிழக ஆளுநருக்கு 1000 அஞ்சல் அனுப்பி நூதன போராட்டம்.
D.D. தமிழ் தொலைக்காட்சி நடத்திய ‘இந்தி மாத’ கொண்டாட்டத்தின் போது பாடப்பட்ட தமிழ்த்தாய் வாழ்த்தில் ‘திராவிடநல் திருநாடும்’ என்ற வார்த்தையைப் இடம்பெறாததை கண்டித்து தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு ‘திராவிடநல் திருநாடு’ என்ற வரி அடங்கிய 1000 அஞ்சல் அட்டைகள் அனுப்பி மதுரை மாவட்டம் திராவிடர் விடுதலைக் கழகத்தின் சார்பில் மதுரை தலைமை தபால் நிலையம் வாயிலாக அஞ்சல் அட்டை அனுப்பி நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு முழுவதும் 20,000 க்கும் மேற்பட்ட தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டத்தின் ஒரு பகுதியாக மதுரையில் இருந்து 1,000 தபால் அட்டைகள் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது, இந்நிகழ்வில் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கலந்து கொண்டனர்.