ஒன்றிய அரசை கண்டித்து தஞ்சை மத்திய மாவட்ட தமிழக வெற்றி கழகத்தினர் சார்பில் ஆர்ப்பாட்டம்
ஒன்றிய அரசு கொண்டு வந்துள்ள வக்பு வாரிய சட்டத்தை கண்டித்தும், உடனடியாக வக்பு வாரிய சட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என வலியுறுத்தி தமிழக வெற்றி கழகத்தினர் தமிழக முழுவதும் இன்று கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இதே போல் தஞ்சை மத்திய மாவட்ட சார்பில் மாவட்ட செயலாளர் விஜய் சரவணன் தலைமையில் தஞ்சை தலைமை தபால் நிலையம் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் தமிழக வெற்றிக் கழகத்தினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு ஒன்றிய அரசிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.