in

புதுச்சேரியில் கிராம மக்கள் நடத்திய போராட்டம்


Watch – YouTube Click

புதுச்சேரியில் கிராம மக்கள் நடத்திய போராட்டம்

 

புதுச்சேரி அடுத்த மங்களம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த ஈஞ்சோலை மாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் சிதலமடைந்து உள்ளதால் அதை இடித்துவிட்டு புனரமைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டு வருகிறது .

மேலும் இந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தில் அதே பகுதியைச் சேர்ந்த ஜனார்த்தனன் என்பவர் வீடு கட்டி உள்ளார்.

கோயில் புனரமைப்பு பணிக்காக வீட்டை காலி செய்ய கோயில் நிர்வாகிகள் கூறும்போது அதை ஏற்க மறுத்த ஆக்கிரமிப்பாளர் கோவில் நிர்வாகிகளிடம் தகராறில் ஈடுபட்டு வீட்டை காலி செய்யவும் மறுத்து வந்தார்.

இந்த நிலையில் கோவில் இடத்தை ஆக்கிரமிப்பு செய்துள்ள அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒரு கிராமமே ஒன்று திரண்டு மங்களத்திலிருந்து புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியை சந்திக்க பேரணியாக சென்றனர்.

அப்போது தடுப்பு கட்டை அமைத்த மங்கலம் போலீசார் பேரணியாக செல்ல தடை விதித்து அனைவரையும் தடுத்து நிறுத்தினர். இதனால் போலீசாருக்கும் பொது மக்களுக்கும் இடையே கடுமையான தள்ளுமுள்ளு வாக்குவாதம் ஏற்பட்டது.

அப்போது நிலைமை கட்டுக்கடங்காமல் போகவே போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது தடியடி நடத்தினர்.இதில் 15-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர்.

போலீஸ் தடியடியில் காயமடைந்தவர்கள் வில்லியனூரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுக் கொண்டு கை, கால், தலை, ஆகியவற்றில் கட்டுகளோடு பேருந்து ஏறி புதுச்சேரி வந்து அவர்கள் முதலமைச்சர் ரங்கசாமியை சட்டப்பேரவை சந்தித்து நடந்த சம்பவங்களை முறையிட்டனர்.

மேலும் கோவில் இடத்தை ஆக்கிரமித்துள்ளவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் கோவில் இடத்தை மீட்டுக் கொடுக்க வேண்டும், நியாயமாக போராட்டம் நடத்திய தங்கள் மீது தடியடி நடத்திய போலீசார் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி முதல்வரிடம் மனு அளித்தனர்.

மனுவை பெற்றுக் கொண்ட முதலமைச்சர் ரங்கசாமி இதுகுறித்து உரிய விசாரணை செய்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதி அளித்தார்.


Watch – YouTube Click

What do you think?

மகளிர் சுய உதவிக் குழு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

பேவர் பிளாக் சாலைப் பணிகளை தடுத்து நிறுத்தி பொது மக்கள்