in

சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி முன்பு கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம். அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் நடந்தது. மருத்துவக் கல்லூரியை முழுமையாக அரசு கட்டுப்பாட்டில் கொண்டு வர அரசாணையை பிறப்பிக்க வலியுறுத்தல்

சிதம்பரத்தில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வாயில் முன்பு இன்று அண்ணாமலைப் பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கோரிக்கை விளக்க ஆர்ப்பாட்டம் நடந்தது. மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்று 12 ஆண்டுகள் ஆகியும் மருத்துவமனையில் பணிபுரியும் ஊழியர்களுக்கு அரசு ஆணையின்படி கிடைக்கப்பட வேண்டிய எந்த பலன்களும் கிடைக்கவில்லை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு அண்ணாமலை பல்கலைக்கழக சங்கங்களின் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் மதியழகன் தலைமை தாங்கினார்.

இதில் சங்க நிர்வாகிகள், மருத்துவ கல்லூரி மருத்துவமனை ஊழியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். அப்போது பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த ஒருங்கிணைப்பாளர் மதியழகன்,

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை அரசே ஏற்க வேண்டும் என தொடர்ந்து போராட்டங்களை நடத்தியதன் விளைவாக கடந்த 2013 ஆம் ஆண்டு பல்கலைக்கழகத்தை அரசு ஏற்றது. தற்போது 12 ஆண்டுகள் ஆகி விட்ட பிறகும், ஊழியர்களின் ஓய்வூதிய பலன்கள், தற்போது பணியாற்றி வரும் ஊழியர்களின் பதவி உயர்வு உள்ளிட்ட எந்தவித அடிப்படை கோரிக்கைகளும் நிறைவேற்றப்படவில்லை.

மருத்துவக் கல்லூரியை அரசு ஏற்ற பிறகு அதற்கான அரசாணையை பிறப்பிக்க வேண்டும். அந்த அரசாணையை பிறப்பித்தால்தான் மருத்துவக் கல்லூரியும், மருத்துவமனையும் தமிழக அரசின் முழு கட்டுப்பாட்டில் செல்லும். அதனால் இந்த அரசாணையை பிறப்பிக்க வலியுறுத்தி பல கோரிக்கைகளை அமைச்சரிடமும், அரசிடமும் வைத்திருக்கிறோம். ஆனால் இதுவரை அரசாணை பிறப்பிக்கப்படவில்லை.

இந்த மருத்துவமனையில் நரம்பியல் துறை போன்ற பல்வேறு துறைகளுக்கு சிறப்பு மருத்துவர்கள் இல்லை. அதனால் இங்கு வரும் நோயாளிகள் பெரும்பாலும் வேறு மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பப்படுகின்றனர். மருத்துவமனையில் பணியாற்றும் ஊழியர்களுக்கு அகவிலைப்படி நிலுவைத் தொகை, கொரோனா காலத்தில் பணியாற்றிய மருத்துவர்களுக்கு ஊக்கத்தொகை உள்ளிட்டவை வழங்கப்படவில்லை. எனவே அரசு இதில் தலையிட்டு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என்றார்

What do you think?

சிதம்பரம் தில்லை காளி கோயில் உண்டியல் எண்ணப்பட்டது

திருவண்ணாமலை 4வது மாவட்ட அளவிலான கராத்தே போட்டியில் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு