வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு பேரணியில் தேசிய கொடியுடன் சென்று ஆர்பாட்டம்
வக்பு வாரிய சட்ட திருத்த மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்து பழனியில் அனைத்து இஸ்லாமிய சமுதாயம் சார்பில் 1000க்கும் மேற்பட்ட இஸ்லாமியர்கள் கலந்து கொண்டு பிரம்மாண்ட பேரணியில் தேசிய கொடியுடன் சென்று, மற்றும் ஆர்பாட்டம் நடைபெற்று வருகிறது.
கடந்த சில நாட்களுக்கு முன்பு மக்களவையில் வக்பு வாரிய சட்ட திருத்த மசோதா குடியரசு தலைவர் ஒப்புதலுடன் நிறைவேற்றப்பட்டது. இதனால் இந்தியா முழுவதும் இருந்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பல்வேறு கண்டனங்களை தெரிவித்து வருகிறது.
அதன் ஒரு பகுதியாக திண்டுக்கல் மாவட்டம் பழனி , நெய்க்காரப்பட்டி பாலசமுத்திரம், கீரனூர், ஆயக்குடி உள்ளிட்ட அனைத்து இஸ்லாமிய சமுதாய மக்கள் சார்பில், பழனி பெரிய பள்ளிவாசலில் இருந்து மிகப் பிரம்மாண்டமான பேரணி துவங்கி ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பெரிய பள்ளிவாசல் முதல், கடைவீதி சாலை, காந்தி மார்க்கெட் சாலை ,பேருந்து நிலையம், ரயில்வே பீடர் சாலை வழியாக சென்று மின்வாரிய திடலில் பேரணி நிறைவுற்று பிரம்மாண்ட ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
இதில் ஒன்றிய அரசு வக்பு திருத்த சட்ட மசோதாவிற்கு எதிர்ப்பு தெரிவித்தும் வக்பு திருத்த சட்ட மசோதா மத சுதந்திரத்திற்கு எதிரானது , வக்பு திருத்த சட்ட மசோதாவை ஏற்க மாட்டோம் , வக்பு திருத்த சட்ட அரசியல் அமைப்பிற்கு எதிரானது என்றும், உள்ளிட்ட பல்வேறு பதாகைகள் ஏந்தியபடி கோஷங்கள் எழுப்பப்பட்டு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
இதில் திமுக, கம்யூனிஸ்ட் கட்சி விடுதலை சிறுத்தை கட்சி காங்கிரஸ் கட்சி அனைத்து சமுதாய இஸ்லாமியர் கூட்டமைப்பு அனைத்து இயக்கங்கள் சார்பில் கலந்து கொண்டனர்.