in

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட மனநல ஆலோசகர் கைது

ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட மனநல ஆலோசகர் கைது

 

நாகையில் வேலியே பயிரை மேய்ந்த கதை- ஆதரவற்றோர் குழந்தைகள் இல்லத்தில் அத்துமீறலில் ஈடுபட்ட மனநல ஆலோசகர் போக்ஸோ சட்டத்தில் கைது

நாகப்பட்டினம் சாமந்தான் பேட்டையில் அரசு ஆதரவற்ற குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. இதில் 50-க்கும் மேற்பட்ட குழந்தைகள் தங்கி அருகில் உள்ள பள்ளிகளில் படித்த வருகின்றனர்.

இந்த காப்பகத்தில் இருந்து குழந்தைகள் அடிக்கடி மாயமாவதும் மீட்கப்படுவதும் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் குழந்தைகளுக்கு மனநிலை ஆலோசனை வழங்குவதற்காக கடந்த ஐந்தாண்டுகளுக்கு முன் மனநல ஆலோசகர் சத்யபிரகாஷ் நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் 50க்கும் மேற்பட்ட ஆதரவற்ற குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுக்கப்படுவதாக காவல்துறையினரிடம் குழந்தைகள் தகவல் தெரிவித்தனர்.

அதனைத் தொடர்ந்து காப்பகத்தில் போலீசார் நடத்திய விசாரணையில் நல்ல தொடுதல் கெட்ட தொடுதல் குறித்து வகுப்பெடுத்து குழந்தைகளுக்கு பாலியல் ரீதியாகவும், மன ரீதியாகவும் தொல்லை கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.

இதனையடுத்து குழந்தைகள் காப்பக கண்காணிப்பாளர் சசிகலாவிடம் புகார் பெற்ற நாகை அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் வேம்பரசி, மனநல ஆலோசனை கொடுத்து வந்த சத்யபிரகாஷ்சை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

மேலும் 50க்கும் மேற்பட்ட மாணவிகளிடம் தொடர்ந்து சமூக நலத்துறை அதிகாரிகள், மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு நல துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.

ஆதரவற்ற பெண் குழந்தைகளுக்கு தொடர்ந்து பாலியல் தொல்லை கொடுத்த மனநல ஆலோசகர் கைது செய்யப்பட்ட சம்பவம் நாகையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

மாஞ்சோலை தேயிலைத் தோட்ட வாழ்வாதார பிரச்சனை தேசிய மனித உரிமை ஆணையம் நேரில் விசாரணை

விவசாயிகளை வனவிலங்குகள் தொடர்ந்து தாக்கி வரும் நிலையில் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் விவசாயிகள் சங்கத் தலைவர் கோரிக்கை.