வேகத்தடை அமைக்காதது விபத்துக்கு காரணம் என பொதுமக்கள் குற்றச்சாட்டு
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி முதல் கும்பகோணம் வரையில் சாலை அகலப்படுத்தும் பணி நடைபெற்று வருகின்ற.
குத்தாலம் பகுதியில் தற்போது அகலப்படுத்தும் பணி நிறைவடைந்த நிலையில் குத்தாலம் தேரடி என்ற இடத்தில் அபாயகரமான வளைவு பகுதியில் ஏற்கனவே இருந்த வேகத்தடயை புதிய சாலை அமைக்கும் போது வேகத்தடை அமைக்கவில்லை.
இதனால் அந்த பகுதியில் வேகமாக செல்லும் வாகனங்கள் மோதி விபத்துக்குள்ளாகி வருகின்றன நேற்று குத்தாலம் அருகே அரையபுரம் பகுதியைச் சேர்ந்த சுரேஷ் அதே பகுதியைச் சேர்ந்த தமிழரசன் என்ற இளைஞர் உடன் இருசக்கர வாகனத்தில் வந்து கொண்டிருந்தார்.
அப்போது தேரடியில் மயிலாடுதுறை நோக்கி சென்ற அரசு பேருந்து வேறொரு வாகனத்தை வேகமாக முந்திய போது இருசக்கர வாகனத்தின் மீது மோதியது காயமடைந்த இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
சம்பவம் குறித்து குத்தாலம் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.விபத்தின் சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக ஊடகங்களில் வைரலாக பரவி வருகிறது.
சாலையில் மீண்டும் வேகத்தடை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையை பொதுமக்கள் விடுத்து உள்ளனர்.