in

திருத்துறைப்பூண்டியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு

திருத்துறைப்பூண்டியில் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பொதுமக்களுக்கு காவல்துறை சார்பில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

தீபாவளி பண்டிகை வரும் அக்டோபர் 31 ஆம் தேதி வியாழக்கிழமை கொண்டாடப்பட உள்ள நிலையில் திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி நகர் பகுதிகளில் உள்ள கடை வீதிகளில் பண்டிகைக்கு தேவையான பொருட்களை வாங்குவதற்காக பல்வேறு கிராமங்களை சேர்ந்த பொதுமக்கள் நகர் பகுதிக்கு வருவார்கள் இதனால் கூட்டம் அதிகமாக இருக்கும் இதனால் குற்ற செயல்கள் எதுவும் ஏற்படாமல் இருப்பதற்காக திருவாரூர் மாவட்ட எஸ்பி ஜெயக்குமார் அவர்கள் அறிவுறுத்தலின் பேரில் டி எஸ் பி பாஸ்கரன் தலைமையில் திருத்துறைப்பூண்டி காவல்துறை சார்பில் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் காவல்துறை ரோந்து வாகனம் மற்றும் தனியார் வாகனத்தில் ஒலிபெருக்கி மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது

பொருட்கள் வாங்க வரும் பொதுமக்கள் அணிந்து வரும் நகைகளை பத்திரமாக பாதுகாத்துக் கொள்ளவும் பணம் மற்றும் பொருள்களை பத்திரமாக வைத்துக் கொள்ளவும் வங்கியில் பணம் எடுத்துச் செல்லுதல் மற்றும் நகைகளை அடகு வைத்தல் அடகு வைத்த நகைகளை திருப்புதல் போன்ற செயல்களில் ஈடுபடும் பொழுது உடனடியாக வீடுகளுக்கு செல்ல வேண்டும் பாதுகாப்பாக பொருட்களை வைத்திருக்க வேண்டும் என்றும் உங்களது திசை திருப்பும் வகையில் கீழே பணம் மற்றும் பொருட்கள் கடந்தால் அதனை எடுக்க கூடாது என்றும் காவல்துறையினர் ஒலிபெருக்கி மூலம் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர் .

What do you think?

தேரிழந்தூர் அர் ரஹீமிய்யா அரபி பாடசாலை மற்றும் மயிலாடுதுறை வட்டார ஜமாஅத்துல் உலமா சபை மற்றும் ரஹுமீ ஆலிம்கள் பேரவையின் 8 ஆம் ஆண்டு மீலாது விழா

வேளாண்மை கூட்டுறவு சங்க ஊழியர்கள் தொடர் வேலை நிறுத்த போராட்டம்