சாக்கடையுடன் அமலை செடிகள் படிந்து , குப்பை கூலமாக காட்சியளிக்கும் நெல்லை டவுனில் உள்ள கால்வாய்கள் மாநகராட்சி கால்வாயில் வெள்ள பெருக்கு ஏற்படுவதற்கு முன்பே மாநகராட்சி இந்த கால்வாயை தூர் வார வேண்டும் பொதுமக்கள் கோரிக்கை
நெல்லை மாவட்டத்தில் பிரதான அணையான பாபநாசம் அணையில் இருந்து திறக்கப்படும் தண்ணீரானது சுமார் 128 கிலோமீட்டர் தூரம் பயணித்து தூத்துக்குடி மாவட்டம் புன்னக்காயலில் கடலில் கலக்கிறது.
இந்த அணைகளில் இருந்து திறக்கப்படும் தண்ணீர் வடக்கு மற்றும் தெற்கு கோடை மேலழகியான், நதியுண்ணி, கன்னடியன், கோடகன் கால்வாய், பாளையங்கால்வாய் உள்ளிட்ட 7 கால்வாய்கள் மூலம் 40 ஆயிரம் ஏக்கர் நிலப்பரப்பை பாசன வசதி பெற செய்கிறது. இது தவிர தூத்துக்குடி மாவட்டத்திலும் சுமார் 46 ஆயிரம் ஏக்கர் வரை பாபநாசம் அணை தண்ணீரை நம்பி விவசாயம் நடந்து வருகிறது. இதில் நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான கால்வாயாக கோடகன் இருக்கிறது
நெல்லை மாவட்டத்தில் விவசாயத்திற்கு முக்கியமான கால்வாயாக கோடகன் கால்வாயக இருக்கிறது. வடக்கு அரியநாயகிபுரம் அணைக்கட்டில் கோடகன் கால்வாயானது துவங்கி சுத்தமல்லி குளத்திலிருந்து இறுதியாக கரையிருப்பு குளம் வரை சென்று 30 குளங்களுக்கு தண்ணீர் சென்றடைகிறது இறுதியாக தாமிரபரணி நதியினை சென்றடைகிறது
ஆனால், இவற்றில் பலவும் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டிருக்கின்றன.
கால்வாயின் தொடக்கம் முதல் கடைசி வரையில் ஆகாயத்தாமரை, அமலை செடிகள், கால்வாய் முழுக்க ஆக்கிரமித்து இருப்பதால் கால்வாயில் நீரோட்டம் தடைபட்டு, கடைமடை பகுதிக்கு தண்ணீர் சென்று சேருவதில்லை. குறிப்பாக நெல்லை டவுன் காட்சி மண்டம் அருகே இந்த பகுதியில் மாநகராட்சி கழிவுகளும், சாக்கடையும், குடிமகன்களால் வீசப்படும் மது பாட்டில்களும்,அமலைசெடிகளும் ,அடைத்து தண்ணீர் சீராக வழிந்தோட முடியாமல் போய்விடுகிறது குப்பை தொட்டிகள் போதுமானதாக இல்லாததால் பொதுமக்களும் குப்பைகளை கால்வாயில் கொட்டி விடுகின்றனர் எனவும், பெரும்பாலானோர் கட்டிடக்கழிவுகளை கொட்டி கோடகன் கால்வாயின் அகலத்தை சுருக்கி விட்டார்கள் எனவும் சமூக ஆர்வலர்கள் குமுறுகின்றனர். கடந்த முறை இந்த கால்வாயில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு இந்த பகுதி முழுவதும் வெள்ளப்பெருக்கால் பாதிக்கப்பட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது மேலும் இந்த கால்வாயில் உள்ள பாலங்களில் உள்ள சுற்றுசூவர் கடந்த வருடம் ஏற்பட்ட வெள்ளத்தில் இடிந்து விழுந்து இன்னும் சரி செய்யப்படாமல் இருக்கிறது
எனவே பருவமழை தீவிரமடைந்து வருவதால் இந்த கால்வாயில் உள்ள குப்பைகளையும் அமலை செடிகளையும் மண்மேடுகளையும் உடனடியாக வெற்றி வெள்ளம் ஏற்படும்பொழுது நீரோட்டம் சரியாக செல்ல மாநகராட்சி தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் , கால்வாயை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்பதே பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள், விவசாயிகள் என அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.