in

திருவாடானை அருகே மது கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை

திருவாடானை அருகே மது கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்

தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்களை கையெடுக்க போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளனர்

ராமநாதபுரம் மாவட்டம் திருவாடானை அருகே குருந்தங்குடி கிராமம் உள்ளது. இந்த கிராமத்தைச் சுற்றி நூற்றுக்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளது.  அனைத்து கிராம மக்களும் இங்கு வந்துதான் மற்ற பகுதிக்கு செல்ல வேண்டியதால் பேருந்து நிறுத்தமும். கடைகளும், மேலும் முக்கியமான பகுதியாக இருப்பதால் பொது மக்கள் அதிகம் கூடும் இடமாக  உள்ள முக்கிய பகுதியாக உள்ளது.

இங்கு இருந்து தான் பள்ளி மாணவ மாணவிகள்  கல்லூரிக்கு செல்வோர் மருத்துவமனைக்கு செல்வோர் மற்ற இதர பணிகளுக்கு செல்வோர் என அனைவரும் இந்த பகுதியில் இருந்து தான் செல்ல வேண்டும்

இந்நிலையில் இங்கு தமிழக அரசு டாஸ்மாக் கடை எண் 7034  உள்ளது.
இந்த மதுக்கடையால் தினமும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படுவதோடு பள்ளி மாணவ மாணவிகள் பள்ளி கல்லூரிகளுக்கு செல்வதிலும் சிக்கல் நீடித்து வருகிறது மேலும் பொதுமக்களும், பெண்களும்,  சுதந்திரமாக அப்பகுதியில் நடமாட முடியாத அவல நிலை இருப்பதாக கூறுகின்றனர்.

தீபாவளி அன்று இப்பகுதியில் பெரிய அடிதடி பிரச்சினை நடந்ததாகவும் தினமும் ஒவ்வொரு நாளும் பிரச்சனைகள் நடந்து வருவதாகவும் கூறுகின்றனர்.இந்த சூழல் கடந்த அக்டோபர் 8 தேதி மதுக்கடை அருகே குருந்தங்குடியை சேர்ந்த சேதுராமனை இதே பகுதியைப் சேர்ந்த சூரியா தனது நண்பர்களுடன் வந்து அரிவாள்ளால்  வெட்டியதில் பலத்த காயமடைந்த நிலையில்  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் டாஸ்மாக்  கடையை அப்புறப்படுத்த வேண்டும் தவறும் பட்சத்தில் பல்வேறு போராட்டங்களை கையில் எடுக்க போவதாக பகுதி  பெண்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

What do you think?

ஶ்ரீ விஷ்ணு துர்க்கை அம்மன் திருக்கோவிலில் உற்சவ விழாவை முன்னிட்டு முருக பெருமானுக்கு சிறப்பு அலங்கார ஆராதனைகள்

குவாட்டருக்காக கொலை சம்பை கிராமத்தில் பயங்கரம்