in

வீணாக செல்லும் குடிநீர் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை


Watch – YouTube Click

மதுரை சாலையில் பல ஆயிரம் லிட்டர் வீணாக கழிவுநீர் தொட்டியில் செல்லும் குடிநீர் நடவடிக்கை எடுக்க கோரி பொதுமக்கள் கோரிக்கை

மதுரை காளவாசல் பிரதான சாலையில் தேனி மெயின் ரோடு நுழைவு வாயிலில் ரோட்டின் நடுவே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனால் குடிநீர் வீணாவதுடன் பொதுமக்கள் நடந்து செல்வது வாகன ஓட்டிகளுக்கும் இடையூறு ஏற்பட்டு வருகிறது.

மேலும் கடந்த சில மாத காலமாக இந்த குழாயில் அடிக்கடி உடைப்பு ஏற்பட்டு வந்தது இதனால் மதுரை மாநகராட்சி அதிகாரிகள் பலமுறை சரி செய்து குழாயில் இருந்து அதிக அளவில் வெளியேறும் குடிநீர் ரோட்டில் வீணாக பாய்ந்து வருகிறது. குழாய் உடைப்பு ஏற்பட்டு 1வாரகாலத்திற்கு மேலாகிய பின்னரும் சீரமைக்கப்படாமல் இருப்பதால் இதுவரைக்கும் ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது வீணாகி வரும் குடிநீரை மதுரை மாநகராட்சியினரே அருகில் உள்ள கழிவுநீர் தொட்டியில் வாய்க்கால் மூலம் வெட்டி விட்டுள்ளனர்

எனவே குடிநீர் வீணடிப்பை தடுக்க குழாய் உடைப்பை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் அடிக்கடி மதுரை மாநகராட்சி அதிகாரிகள் புகார் தெரிவித்து வந்தனர் தற்போது கோடைக்காலத்தின் குடிநீர் தட்டுப்பாடு மிகவும் ஏற்படுத்தி உள்ளது இது ஒருபுறமிருக்க, இது நகரின் முக்கியமான பகுதி என்பதால் எப்பொழுதும் பரபரப்பாக காணப்படும் எனவே இந்த பகுதியில் குடிநீர் உடைப்பை சரி செய்ய வேண்டும் மிகவும் சிரமத்துடன் காணப்பட்டன அடிக்கடி குடிநீர் குழாய் உடைந்து வருவதை மிக விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மதுரை மக்கள் நீண்ட நாள் கோர்க்கையாகும் இது மதுரை மாநகராட்சி நடவடிக்கை எடுக்குமா


Watch – YouTube Click

What do you think?

சபரிமலையில் இனி ஒரு நாளில் 80 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே அனுமதி

ஜவ்வாது மலை அடிவாரம் மஞ்சள் ஆற்றில் கடுமையான வெள்ளப்பெருக்கு விவசாயம் பொதுமக்கள் மகிழ்ச்சி