in

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் தொல்லியல் அறிஞர் பொ.இராசேந்திரனின் நினைவு மலராக “இராசேந்திரம்” நூல் வெளியீட்டு விழா

பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் சார்பில் தொல்லியல் அறிஞர் பொ.இராசேந்திரனின் நினைவு மலராக “இராசேந்திரம்” நூல் வெளியீட்டு விழா

மதுரை அழகர் கோவில் சாலையில் அமைந்துள்ள தனியார் தங்கும் விடுதியில் நடைபெற்றது, இந்த நிகழ்வில் நிதி மற்றும் தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையம் செயலர் சாந்தலிங்கம் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

விழாவில் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில் “சிந்து சமவெளி நாகரிகமும், திராவிட நாகரிகமும் ஒன்று தான் என்பதை நிரூபிக்க தமிழ்நாடு அரசு ஆய்வு பணிகளை மேற்க் கொண்டு வருகிறது, இந்திய அளவில் ஆதிச்சநல்லூர் அகழாய்வு தான் முதன் முதலில் தொடங்கப்பட்ட ஆய்வாகும், தமிழகத்தின் இன்றைய சூழலில் திராவிடம், திராவிடர் எனும் வார்த்தை பலருக்கு ஒவ்வாமையாக உள்ளது, சங்க இலக்கியங்களில் வரக்கூடிய வார்த்தைகளுக்கும், அகழாய்வுகளுக்கும் தொடர்புகள் உள்ளது..

தமிழ்நாடு அரசின் முதலமைச்சர் விரிவான அகழாய்வு நடத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறார், அகழாய்கள் வாயிலாக உண்மையாக தரவுகளை வெளிக் கொணர வேண்டும், உண்மையான வரலாற்றை மக்களுக்கு கொண்டு சேர்க்க வேண்டும் எனும் நோக்கில் தமிழகத்தில் அகழாய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது” என கூறினார்.

What do you think?

மதுரை மீனாட்சி அம்மன் கோவில் கும்பாபிஷேக பணிகளை தொடங்குவதற்கான தங்க விமானங்கள் மற்றும் கோபுரங்களுக்கு பாலாலயம் வெகு விமர்சையாக நடைபெற்றது

இந்திய வரைபடத்தில் திராவிட நாடு எங்கே இருக்கிறது மதுரையில் பாஜகவினர் ஒட்டிய போஸ்டர்