in

புதுச்சேரி….ஆரோவில்லில் நடந்த மன அமைதிக்கான ஓட்டம்…

புதுச்சேரி….ஆரோவில்லில் நடந்த மன அமைதிக்கான ஓட்டம்…
3 ஆயிரத்துக்கு 500 பேர் பங்கேற்பு …ஓட்டத்தில் பங்கேற்றவள் உற்சாகமாக நடனமாடி மகிழ்ச்சி…

புதுச்சேரி அருகே உள்ள ஆரோவில் சர்வதேச நகரம் உள்ளது.இங்கு ஆண்டுதோறும் அமைதிக்கான மரத்தான் ஓட்டம் நடைபெறும்.இவ்வாண்டிற்கான ஓட்டமம் இன்று நடைபெற்றது. சென்னை,பெங்களூரு,மும்பை,ஆந்திரா,கேரளா உட்பட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஆரோவில்லில் வசிக்கும் வெளிநட்டவரும் என 3500க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

உலக அமைதி, மனித ஒற்றுமை, உடல் வலிமை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு ஆகியவற்றை வலியுறுத்தி நடைபெற்ற 42 கி.மீ.தூர ஓட்டத்தில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை கலந்து கொண்டு ஆர்வத்துடன் ஓடினர். இதனை ஆரோவில் அறக்கட்டளை சிறப்பு அதிகாரி சீத்தாராமன் துவக்கி வைத்தார். போட்டியில் வென்றவர்களுக்கு ஆரோவில் நிர்வாகம் சார்பில் பரிசளிக்கப்பட்டது.

ஓட்டத்தில் பங்கேற்ற அனைவரும் சோர்வடையாமல் ஓட்டம் முடிந்த அரங்கில் நடனமாடினார்கள்.தமிழ் பாடல்களுக்கு அரங்கில் பெரிய அதிர்வலை ஏற்பட்டது.சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உற்சாகம் குறையாமல் ஆட்டம் ஆடி மகிழ்ந்தனர்.

What do you think?

புதுச்சேரி….எரிபொருள் சேமிப்பை வலியுறுத்தி கடற்கரை சாலையில் நடைபயணம்

கொலை நகரமானது புதுச்சேரி…மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அமைச்சர்களுக்கு வெட்கமாக இல்லை