in

புதுச்சேரி அகரம் அரசு ஆரம்ப பள்ளியில் பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாததால் பெற்றோர்கள் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவம்

புதுச்சேரி அகரம் அரசு ஆரம்ப பள்ளியில் பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாததால் பள்ளிக்கு வந்த பிள்ளைகளை பெற்றோர்கள் மீண்டும் வீட்டுக்கு அழைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

புதுச்சேரி ஊசூடு தொகுதி அகரம் கிராமத்தில் ஆரம்ப பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் எல்.கே.ஜி முதல் மூன்றாம் வகுப்பு வரை நடத்தப்பட்டு வருகிறது. இந்த பள்ளியில் சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

இந்தப் பள்ளியில் பணியாற்றிய இரண்டு ஆசிரியர்கள் கடந்த 15 தினங்களுக்கு முன்பு வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் இதுவரை மீண்டும் ஆசிரியர்கள் நியமிக்கப்படாததால் மாணவர்கள் கல்வி கற்க முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது.

மேலும் இந்த பள்ளியில் இரண்டு வகுப்பறைகள் மட்டுமே உள்ளது இதனால் கூடுதல் அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பல நாள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் இன்று காலை பள்ளிக்கு வந்த மாணவர்களுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லாததால் வெளியில் நின்று கொண்டிருந்தனர் இதனை அறிந்த பெற்றோர்கள் மீண்டும் பள்ளிக்கு சென்று தங்களது பிள்ளைகளுடன் பள்ளி நுழைவாயில் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு கோரிக்கைகளை வலியுறுத்தினர் தொடர்ந்து தனது பிள்ளைகளை வீட்டுக்கும் அழைத்துச் சென்றனர். இதனால் பள்ளி வளாகத்தில் திடீரென்று பரபரப்பு நிலவியது.

இது குறித்து பெற்றவர்கள் கூறும் பொழுது…

பள்ளியில் பிள்ளைகளுக்கு பாடம் எடுக்க ஆசிரியர்கள் இல்லை மாணவர்கள் அமர போதுமான கட்டிட வசதிகளும் இல்லை மேலும் மாணவர்களுக்கு பாதுகாப்பற்ற சூழல் நிலவுகிறது . இதனால் தங்களது பிள்ளைகளை வீட்டிற்கு அழைத்துச் செல்வதாகவும் தெரிவித்தனர். எனவே உடனடியாக கோரிக்கைகளை ஏற்று மீண்டும் பள்ளிக்கு ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

What do you think?

மின் கட்டண உயர்வு ரத்து செய்ய கோரி..இந்தியா கூட்டணி கட்சிகள் ஊர்வலம்

சுதந்திரப் போராட்ட வீரர் மாமன்னர் பூலிதேவர் 309வது பிறந்த நாளை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் – வருவாய் மற்றும் பேரிடர் துறை அமைச்சர் எம் பி எம் எல் ஏக்கள் உள்ளிட்டோர் மாலை அணிவித்து மரியாதை