தேர்தல் ரிசல்ட் வெளியானதும் புதுச்சேரி சட்டசபை கூட்ட முடிவு
ரூ. 400 கோடி விடுவிப்பு… புதுச்சேரி அரசின் இடைக்கால பட்ஜெட்டுக்கு மத்திய அரசு…தேர்தல் ரிசல்ட் வெளியானதும் சட்டசபை கூட்ட முடிவு…புதுச்சேரி அரசின் 5 மாத கால இடைக்கால பட்ஜெட்டிற்கு மத்திய அரசு பங்களிப்பு தொகையாக ரூ. 400 கோடி விடுவித்துள்ளது…
புதுச்சேரி சட்டசபையில் கடந்த 10 ஆண்டுகளாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டு வந்தது.
அதன் பின் சில மாதங்கள் கழித்து மீண்டும் முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. அதிலும் கடந்த கால புதுச்சேரி அரசின் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு சரியான நேரத்தில் அனுமதி அளிக்காததால் சிக்கல்கள் ஏற்பட்டன. உரிய நேரத்தில் பட்ஜெட்டுக்கு மத்திய அரசு அனுமதி அளிக்காததால் சட்டசபை கூட்டமே தள்ளி வைக்கப்பட்ட சூழல் ஏற்பட்டது.
என் ஆர் காங்கிரஸ் – பாஜக கூட்டணி அரசில் கடந்த ஆண்டு 15-வது சட்டசபை நான்காவது கூட்டத்தொடரின் போது 2023 – 24 நிதியாண்டிற்கான ரூபாய் 11,600 கோடி முழுமையான பட்ஜெட் அறிக்கை முதல் ரங்கசாமி மார்ச் மாதத்திற்குள் தாக்கல் செய்யப்பட்டு பேரவையின் அனுமதியும் பெறப்பட்டது.
மீண்டும் இடைக்கால பட்ஜெட்….
ஆனால் லோக்சபா தேர்தல் காரணமாக 2024 – 25 நிதி நிதியாண்டிற்கு முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை.
மீண்டும் இடைக்கால பட்ஜெட்டுக்கு புதுச்சேரி அரசு திரும்பியது. கடந்த பிப்ரவரி மாதம் நிதித்துறை பொறுப்பு வகிக்கும் முதல்வர் ரங்கசாமி ஏப்ரல் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான செலவினத்திற்கு மொத்தம் 4 ஆயிரத்து 634 கோடியே 29 லட்சத்து 85 ஆயிரத்திற்கான இடைக்கால பட்ஜெட்டினை தாக்கல் செய்தது.
இந்த இடைக்கால பட்ஜெட்டுக்கு பங்களிப்பு தொகையாக மத்திய அரசு ரூ.400 கோடியை ரிலீஸ் செய்துள்ளது.
அதிகாரிகள் கூறும் பொழுது புதுச்சேரி அரசு வரி மற்றும் வரி இல்லாத வருவாய் என்று 63 சதவீத சொந்த வருமானத்தை கொண்டுள்ளது. 21 சதவீதமும் மத்திய அரசு உதவினை 16 சதவீதம் வெள்ளி மார்க்கெட்டில் கடன் வாங்கியும் செலவினத்தை சமாளித்து வருகின்றது.
மாநிலத்தின் சொத்து வருவாய் 6800 கோடி அதிகரித்துள்ளது. அதனால் நிறைய நலத்திட்டங்கள் செயல்படுத்தி வருகின்றது. அந்த வகையில் கடந்த பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்ட புதுச்சேரி அரசின் ஐந்து மாத இடைக்கால பட்ஜெட்டிற்கு முதல் தவணையாக 400 கோடி ரூபாய் ரிலீஸ் செய்துள்ளது.
மத்திய அரசின் முழு பங்களிப்புத் தொகை பிறகு தான் தெரியவரும் ஆகஸ்ட் மாதம் வரையிலான செலவினத்திற்கு சட்டசபையில் ஒப்புதல் பெறப்பட்டுள்ளது எனவே அடுத்த சட்டசபை கூட்டுவதற்கு போதிய கால அவகாசம் உள்ளது. ஜூன் 4 தேதி தேர்தல் ரிசல்ட் வந்ததும் சட்டசபை எப்போது கூடும் எத்தனை நாட்கள் நடக்கும் என்பதை புதுச்சேரி அரசு முடிவு செய்து அறிவிக்கும்.