புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம்
புதுச்சேரி பாரதிய ஜனதா கட்சியின் செயல் வீரர்கள் கூட்டம் கடலூர் சாலை மரப்பாலம் சந்திப்பில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தொடங்கியது.
பாஜக மாநில தலைவர் செல்வ கணபதி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதுச்சேரி காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து 3000-க்கும் மேற்பட்ட செயல் வீரர்கள் கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் பேசிய பா.ஜ.தலைவர் செல்வகணபதி…
பாஜக கட்சியில் பொறுப்பு இல்லாதவர்கள் அதிமுக தலைவர்கள் படத்தை வைத்து தாமரைக்கு ஓட்டு கேட்டு விளம்பரம் செய்துள்ளனர். அவர்கள் மீது கட்சி நடவடிக்கை என்று தெரிந்த அவர் அதிமுகவின் தயவு பாஜகவிற்கு தேவை இல்லை என்றும் இன்னும் ஒருவாரத்தில் புதுச்சேரி வேட்பாளர் அறிவிக்கப்படுவார் என்று தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா…
புதுச்சேரி பாஜகவினர் வேட்டையாடும் புலி, காங்-திமுகவினர் சர்க்கஸ் புலி என்று தொண்டர்கள் மத்தியில் பேசிய சுரானா புதுச்சேரியில் பாஜக வெற்றி பெறுவது உறுதி இருந்தாலும் எதிர் அணியினரை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்றார்.
தொடர்ந்து பேசிய மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷி….
காங்கிரஸ் ஆட்சியில் மிகப்பெரிய ஊழல் நடந்து நாடே ஊழலில் சிக்கித் தவித்தது. அதுமட்டுமல்லாமல் காங்கிரஸ் ஆட்சியில் நிலக்கரி இறக்குமதி செய்ததில் மிகப்பெரிய ஊழல் நடந்துள்ளது. 2 லட்சத்து 86 ஆயிரம் கோடி அளவில் ஊழல் செய்துள்ளார்கள். ஆனால் தற்போது மோடி தலைமையில் ஊழல் இல்லா ஆட்சி நடைபெற்றுக் கொண்டுள்ளது ஒரு குறிப்பிட்டார்.
நாட்டு மக்களுக்கும் நாட்டுக்காகவும் சிந்திக்கும் பிரதமர் நரேந்திர மோடி மூன்றாவது முறையாக பிரதமர் ஆக வேண்டும் இதற்காக பாஜக தொண்டர்கள் ஒவ்வொருவரும் இணைந்து செயலாற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அவர்வீடு வீடாக சென்று பிரச்சாரம் செய்ய வேண்டும் என்றார்.
திமுக காங்கிரஸ் கட்சிக்கு அவர்களது குடும்பம் தான் தேசம் ஆனால் நரேந்திர மோடிக்கு தேசம் தான் குடும்பம் எனவே என். ஆர். காங்கிரஸ் பாஜக தொண்டர்கள் ஒற்றுமையாக பணியாற்றி மக்களவை தேர்தலில் நிற்கும் பாஜக வேட்பாளரை பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்றார்.
செயல் வீரர்கள் கூட்டத்தில் புதுச்சேரி மேலிட பொறுப்பாளர் நிர்மல் குமார் சுரானா, உள்துறை அமைச்சர் நமச்சிவாயம், பாஜக தலைவர் செல்வகணபதி உள்ளிட்ட அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்கள் பாஜக மாநில மாவட்ட தொகுதி நிர்வாகிகள் என அனைவரும் கலந்து கொண்டனர்.