in

குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை கொண்டாடிய புதுச்சேரி பாஜக எம்எல்ஏ

குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை கொண்டாடிய புதுச்சேரி பாஜக எம்எல்ஏ

 

தனது அணி வெற்றி பெற்றதற்கு குத்தாட்டம் போட்டு மகிழ்ச்சியை கொண்டாடிய புதுச்சேரி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது

புதுச்சேரி ஸ்பைடர் விளையாட்டு கழகம் சார்பில் புதுச்சேரி மாநில அளவிலான ஆடவர்களுக்கான 45 ஆம் ஆண்டு கைப்பந்து போட்டியில் கருவடிக்குப்பம் ஸ்பைடர் ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெற்றது.

இப்போ போட்டியில் புதுச்சேரி காரைக்கால் மாஹே ஏனாம் உள்ளிட்ட 25 க்கும் மேற்பட்ட அணிகள் பங்கேற்றது இதில் இறுதிப் போட்டியில் ஸ்பைடர் மற்றும் சுதந்திர பறவை அணி மோதியது.

இதில் புதுச்சேரி காலாப்பட்டு தொகுதி பாஜக எம்எல்ஏ கல்யாணசுந்தரத்தின் அணியான ஸ்பைடர் அணி வெற்றி பெற்றதை அடுத்து வெற்றி கோப்பையுடன் தனது அணி வீரர்களுடன் நடனமாடி தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரத்தின் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாணசுந்தரம் புதுச்சேரி மாநில கைப்பந்து விளையாட்டு கழகத்தின் தலைவராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது லீக் முறையில் நடைபெற்ற போட்டியில் தனது அணி இறுதிப் போட்டியில் வெற்றி பெற்றதை கொண்டாடும் வகையில் நடனமாடி பாஜக சட்டமன்ற உறுப்பினர் கல்யாண சுந்தரம் குத்தாட்டம் போட்டு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியது கைப்பந்து வீரர்களிடையே உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.

What do you think?

புதுச்சேரி… சிறுமி கொலை வழக்கில் கைதாகி சிறையில் உள்ள விவேகானந்தன் தூக்கு போட்டு தற்கொலை….

100 நாள் வேலை திட்ட பணியை வேளாண்துறை அமைச்சர் தேனீ ஜெயக்குமார் துவக்கி வைத்தார்