மழை பாதிப்புகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை நேரில் சென்று ஆய்வு
புதுச்சேரி கடந்த 24 மணி நேரத்தில் புதுச்சேரியில் 7.2 செ.மீ.மழை அளவும் காரைக்காலில் 9.6 செ.மீ.மழை அளவு பதிவாகியுள்ளது ..
புயல் எச்சரிக்கை காரணமாக புதுச்சேரியில் நேற்று காலை முதல் மாலை வரை கனமழை பெய்து வந்தது இதன் பிறகு மாலை முதல் இன்று காலை வரை மழை விட்டு விட்டு பெய்து வருகிறது தொடர் மழை மற்றும் கனமழை இல்லாத காரணத்தால் மக்களின் இயல்பு வாழ்க்கையில் எந்த பாதிப்பும் இல்லை மக்கள் வழக்கம் போல் மழை அங்கி மற்றும் கொடைகளுடன் தங்களது பணிகளை துவக்கி உள்ளனர் புதுச்சேரி பொறுத்தவரை கடந்த 24 மணி நேரத்தில் 7.2 செ.மீ.மழை அளவும் காரைக்காலில் 9.6 செ.மீ.மழை அளவு பதிவாகியுள்ளது ..
மழை பாதிப்புகளை புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி இன்று காலை நேரில் சென்று ஆய்வு செய்தார். கடற்கரை சாலைக்கு சென்ற அவர் கடற்கரையை பகுதியில் மக்களை இறங்காமல் பார்த்துக் கொள்ள காவல்துறைக்கு அறிவுறுத்தினார்.
மேலும் கடற்கரையில் உள்ள பழைய சாராய ஆலையில் கட்டப்பட்டு வரும் ஒருங்கிணைந்த வணிக வளாகத்தில் துணைநிலை ஆளுநருக்காக தற்காலிகமாக கட்டப்பட்டு வரும் அலுவலகத்தை முதலமைச்சர் ரங்கசாமி ஆய்வு செய்தார்.