இந்த மொஹரம் புதிய நம்பிக்கைகளுக்கு நல்ல தொடக்கத்தைக் காட்டுவதாக அமையட்டும் என புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி மொஹரம் பண்டிகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமி வெளியிட்டுள்ள மொஹரம் பண்டிகை வாழ்த்து செய்தியில், இசுலாமிய ஆண்டின் தொடக்கமான மொஹரம் அல்லாஹ்வின் தயவையும் கருணையையும் பெற சிறப்பு வாய்ந்த மாதமாகவும் தியாகம் மற்றும் ஆசீர்வாதங்கள் நிறைந்த மாதமாகவும் கருதப்படுகிறது.
இறைத்தூதர் நபிகள் நாயகம் அவர்களின் போதனைகள் நம் உள்ளத்தில் ஒரு தெளிவான கண்ணாடியைப் போல அழகாக பிரதிபலித்து, நமது வாழ்க்கைக்கு சரியான பாதையைக் காட்டுவதைப் போல, அருள் நிறைந்த இந்த மொஹரம் புதிய நம்பிக்கைகளுக்கு நல்ல தொடக்கத்தைக் காட்டுவதாக அமையட்டும். மேலும், உங்கள் வாழ்வில் நிறைய மகிழ்ச்சியையும், நல்ல அதிர்ஷ்டத்தையும், செழிப்பையும் கொண்டுவர எனது உளம் நிறைந்த மொஹரம் தெரிவித்துக்கொள்கிறேன்