in

புதுச்சேரி..கடற்கரை சாலை காந்தி சிலை முன் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை…

புதுச்சேரி..கடற்கரை சாலை காந்தி சிலை முன் முதல்வர் ரங்கசாமி தேசிய கொடி ஏற்றி மரியாதை…

காரைக்காலில் அமைச்சர் திருமுருகன், மாகேயில் அமைச்சர் தேனீ ஜெயக்குமார், யானாமில் அமைச்சர் லட்சுமி நாராயணன் ஆகியோர் தேசிய கொடியை ஏற்றி வைத்து மரியாதை

விடுபட்ட ஆண்டுகளுக்கான தமிழ்மாமணி, தெலுங்கு ரத்னா, மலையாள ரத்னா விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன; புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது- சுதந்திர தின உரையில் முதல்வர் ரங்கசாமி தகவல்

புதுச்சேரி மாநிலத்தில் 2013-14 ஆம் ஆண்டில் எம்பிபிஎஸ் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை ஆயிரமாக இருந்தது. இப்பொழுது இது 1880 ஆக உயர்த்துள்ளது. அதேபோல் மருத்துவ உயர் கல்வி பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை 260 ஆக இருந்தது. இது இப்போது 1473 ஆக உயர்ந்துள்ளது.

ஒன்றாம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை புதுச்சேரி அரசு பள்ளிகளில் தொடர்ந்து பயின்று நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று மருத்துவ படிப்புகளில் சேரும் மாணவர்களுக்கு 10 விழுக்காடு இட ஒதுக்கீடு வழங்கும் திட்டம் மாணவர்களுக்கு கிடைத்த மாபெரும் வர பிரசாதம் ஆகும்.

2024-25 ஆம் ஆண்டின் கல்வி ஆண்டில் மாணவர் சேர்க்கை அதிகரிக்கவும் நீட் அடிப்படையிலான பல்வேறு பாடப் பிரிவுகளுக்கான தேர்வில் தகுதி பெற 11 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு பயிற்சி வகுப்புகள் நடத்த திட்டமிட்டு உள்ளது.

புதுச்சேரி மாநிலம் கலைகளையும் கலைஞர்களையும் போற்றி பாதுகாக்கும் மாநிலமாக திறந்து வருகிறது. அந்த வழியில் எனது அரசு நலிந்த கலைஞர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மாதாந்திர நிதி உதவிகளை அவர்களின் வயது வரம்புக்கேற்ப ரூபாய் 4000 மற்றும் ரூபாய் 5000 ஆக உயர்த்தி வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. விடுபட்ட ஆண்டுகளுக்கான தமிழ்மாமணி, தெலுங்கு ரத்னா, மலையாள ரத்னா விருதுகள் விரைவில் வழங்கப்பட உள்ளன.

கலை மற்றும் பண்பாட்டுத்துறையில் காலியாக உள்ள நூலக தகவல் உதவியாளர் மற்றும் இளநிலை நூலக உதவியாளர் பணியிடங்களையும் புதுச்சேரி மொழியியல் பண்பாட்டு ஆராய்ச்சி நிறுவனத்தில் காலியாக உள்ள உதவி பேராசிரியர் பணி இடங்களில் நிரப்ப ஒப்புதல் பெறப்பட்டுள்ளது .

இதற்கான அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும். புதுச்சேரியில் உலகத் தமிழ் மாநாட்டை பிரமாண்டமாக நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இந்திய தொல்லியல் துறையின் உதவியுடன் புதுச்சேரி அரிக்கன்மேட்டில் ரோமன் சரக்கு கப்பல் மாதிரி வடிவில் விளக்க வழிகாட்டி மையம் அமைக்கப்படும். இந்த நினைவு சின்னத்தில் தேசிய பேரிடர்களில் இருந்து பாதுகாப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

What do you think?

78வது சுதந்திர தினம்… நீருக்கடியில் தேசிய கொடியேற்றி கொண்டாட்டம்..

புதுச்சேரி மண்ணாடிப்பட்டு கொம்யூன் பஞ்சாயத்து அலுவலகத்தில் 78-வது சுதந்திர தின விழா