in

புதுச்சேரி…கோர்க்காடு ஏரியை துணைநிலை ஆளுநர் ஆய்வு

புதுச்சேரி…கோர்க்காடு ஏரியை துணைநிலை ஆளுநர் ஆய்வு…ஏரியை சமூகவிரோதிகள் ஆக்கிரமித்து அட்டூழியம் செய்வதாக பொதுமக்கள் புகார்….மத்திய அரசின் நிதியைப் பெற்று புதுச்சேரியின் நீர் ஆதாரம் பாதுகாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என ஆளுநர் பேட்டி…

புதுச்சேரியில் 84 ஏரிகள் மற்றும் 600 குளங்கள் உள்ளிட்ட ஏராளமான நீர்நிலைகள் உள்ளன. இவற்றில் பல ஆக்கிரமிப்புகளால் காணாமல் போய்யுள்ளன. மீதம் இருப்பவைகளில் ஒரு சில ஆக்கிரமிப்பு பிடியில் உள்ளன. எனவே இருக்கும் நீர் நிலைகளை பாதுகாக்க வேண்டுமென அரசுக்கு பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இந்நிலையில் புதுச்சேரியில் புதிய தொழில் ஆளுநராக பதவி ஏற்றுள்ள கைலாசநாதன் நீர் நிலைகளை நேரில் சென்று ஆய்வு செய்து வருகிறார். அந்த வகையில் இன்று அவர் கோர்க்காடு கிராமத்தில் 300 ஏக்கர் பரப்பளவில் உள்ள புதுச்சேரியின் நான்காவது பெரிய ஏரியை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் ஆய்வு செய்தார். அப்போது அங்கு கூடியிருந்த பொதுமக்கள் தங்களது குறைகளை துணைநிலை ஆளுநரிடம் தெரிவிக்கவிடாமல் காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனையறிந்து பெண்களை துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அழைத்து பேசினார். ஏரிக்கரையோரம் உள்ள தங்களது வீடுகளில் மழைகாலங்களில் தண்ணீர் புகுந்து பாதிக்கப்படுவதாகவும்,ஏரியை சமூகவிரோதிகள் ஆக்கிரமித்து அட்டூழியம் செய்வதாக அதிகாரிகள் எங்கள் பகுதியை வந்து பார்வையிடுவதில்லை என சராமாரியாக குற்றம்ச்சாட்டினர்.

மேலும் மின் கட்டண உயர்வை ரத்து செய்ய வேண்டும், நியாயவிலைக் கடைகளை திறக்க வேண்டுமென தெரிவித்தனர்.இதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன், கோர்க்காடு ஏரி ஆக்கிரமிப்பு தொடர்பாக புகார் வந்ததை அடுத்து இன்று ஆய்வு செய்தேன்.
புதுச்சேரியில் உள்ள நீர்நிலைகளை தொடர்ந்து ஆய்வு செய்து வருகிறோம், புதுச்சேரியில் உள்ள 80 நீர்நிலைகளை பாதுகாத்து, புதுச்சேரிக்கு குடிநீர் தேவை மற்றும் விவசாய தேவைக்கு நிரந்தர தீர்வு காணப்படும். ஏரிகளை ஆக்கிரமிப்பு செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

What do you think?

ஆஸ்திரேலியா யு-19 அணிக்கு எதிராக, இந்தியா யு-19 அணியின் 3 ஒருநாள் போட்டிகள் புதுச்சேரியில் நடைபெற உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிய தொழில்நுட்பமான AI கொண்டு மோசடி.