in

புதுச்சேரி 7வது நாளாக தொடர்கிறது ஜிப்மரில் மருத்துவர்களின் வேலை நிறுத்தம்

புதுச்சேரி 7வது நாளாக தொடர்கிறது ஜிப்மரில் மருத்துவர்களின் வேலை நிறுத்தம்

 

புதுச்சேரி…7 வது நாளாக தொடர்கிறது ஜிப்மரில் மருத்துவர்களின் வேலைநிறுத்தம்…காலை 10 மணிக்கே வெளிப்புற சிகிச்சை பிரிவு மூடப்பட்டதால் நோயாளிகள் அவதி. ஏமாற்றத்துடன் திரும்பினார்கள்.

கொல்கத்தாவில் நடந்த கொடூரமான சம்பவத்திற்கு எதிராக நாடு முழுவதும் நடைபெற்று வரும் போராட்டங்களின் ஒரு பகுதியாக ஜிப்மர் மருத்துவர்களும் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். 7 வது நாளாக இன்று ஜிப்மரில் மருத்துவர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவர்களின் வேலை நிறுத்த எதிரொலியாக வெளிப்புற சிகிச்சை பிரிவின் இயங்கும் நேரத்தை மூன்று மணி நேரம் ஜிப்மர் நிர்வாகம் குறைத்துள்ளது.வெளிப்புற நோயாளி பிரிவுகளில் உள்ள மருத்துவர்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளதால் போராட்டங்கள் முடிவுக்கு வரும் வரை, வெளிப்புற நோயாளி பிரிவுகள் காலை 08.00 முதல் 10:00 மணி வரை மட்டுமே இயங்கும் என ஜிப்ம்ர் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

காலை 8 மணி முதல் மதியம் 1 மணிக்கு பதிலாக காலை 10 மணி வரை மட்டுமே வெளிப்புற சிகிச்சை பிரிவு இயங்கியது. காலை 9.45 மணிக்கே மருத்துவ அட்டை போடும் பணி நிறுத்தப்பட்டது. இந்த அறிவிப்பு எதுவும் அறியாத அண்டை மாவட்ட மக்கள் ஜிப்மருக்கு வந்து சிகிச்சை பெறமுடியாமல் காத்திருந்து ஏமார்ந்து ஊர் திரும்பினார்கள்.

வெளிப்புற சிகிச்சை பிரிவு காலை 10 மணிக்கு மூடப்படும் என்பதால் சிகிச்சைக்கு வருபவர்கள் நாளை முன்னதாக வரும்படி ஒலிபெருக்கி மூலம் ஊழியர்கள் கேட்டுக் கொண்டனர்.

போதிய மருத்துவர்கள் இல்லாததால் அவசரமற்ற அல்லது நீண்டகால நோய் சிகிச்சை பெறுவோர் வெளிப்புற நோயாளிகள் பிரிவுக்கு வருவதை தவிர்க்குமாறு ஜிப்மர் நிர்வாகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

இதனால் குறைந்த அளவில் இருக்கும் மருத்துவர்கள் கொண்டு அவசர சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிப்பதில் கவனம் செலுத்த முடியும். இன்னும் சில நாட்களில் போராட்டம் முடிவுக்கு வரும் என நம்புகிறோம். அதனைத் தொடர்ந்து முழு வெளிப்புற பிரிவு சேவைகள் வழக்கம்போல் இயங்கும்.

இந்த இக்கட்டான நேரத்தில் பொதுமக்கள் மற்றும் நோயாளிகள், ஒத்துழைப்பையும் உதவியையும் அளிப்பதன் மூலம் அத்தியாவசிய மற்றும் அவசரமான சேவைகளை அதிகபட்சமாக முடிந்தவரை வழங்க இயலும் என ஜிப்மர் நிறுவனம் தெரிவித்துள்ளது.

What do you think?

ஆவணி அவிட்டத்தை முன்னிட்டு பிரம்ம உபதேச உபநயன விழா

ஒட்டகம் மிதித்து முதியவர் பரிதாபம்