in

புதுச்சேரி சிறுமி கற்பழிப்பு குற்றவாளி சோப்பை விழுங்கி தற்கொலை நாடகம்


Watch – YouTube Click

புதுச்சேரி சிறுமி கற்பழிப்பு குற்றவாளி சோப்பை விழுங்கி தற்கொலை நாடகம்

புதுச்சேரியில் 9 வயது சிறுமி பாலியல் துன்புறுத்தலுக்கு உட்படுத்தப்பட்டு கொலை செய்யப்பட்ட வழக்கில் கைதான இருவரில், ஒரு குற்றவாளி சிறைக்குள் தற்கொலை நாடகம் ஆடி போலீசாரை தொந்தரவு செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதுச்சேரி முத்தியால்பேட்டையில் 9 வயது சிறுமி படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தில் விவேகானந்தன் (57) கருணாஸ் (19) என்ற இருவர் கைதாகி காலாப்பட்டு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் விவேகானந்தன் தற்கொலை முயற்சி செய்ததாக தகவல் தியாக பரவியது. இது குறித்து சிறைத்துறை அதிகாரிகள் கூறும் போது, “தற்கொலை முயற்சி நடந்திருந்தால் மருத்துவமனையில் அனுமதிக்கும் தேவை ஏற்பட்டிருக்கும்.

விவேகானந்தன் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அறை முழுவதும் முழுமையாக கண்காணிக்கப்பட்டு வருகிறது. அதே நேரத்தில் விவேகானந்தன் தற்கொலை நாடகத்தை அவ்வபோது அரங்கேற்றுகிறான்.

குளிக்கும் சோப்பை முழுங்குவது, மூக்கை நீண்ட நேரம் பிடித்துக் கொள்வது, சட்டையால் முகத்தை அழுத்திக்கொள்வது, சட்டையால் கழுத்தை இறுக்கிக் கொள்வது என பல்வேறு தற்கொலை முயற்சி நாடகங்களை மேற்கொண்டான். இப்படியாக பல வழிகளில் தற்கொலை நாடகம் ஆடி சிறை ஊழியர்களை தொந்தரவு செய்து வருகிறான்” என கூறியுள்ளனர்.


Watch – YouTube Click

What do you think?

அடிப்படை வசதிகளை செய்து தரவில்லை என்று பக்தர்கள் குற்றச்சாட்டு

புதுச்சேரி அரசு தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு இலவச கைக்கணி