in

புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு மீன் வளத்துறை அறிவுறுத்தியுள்ளார்கள்

சென்னை மற்றும் ஆந்திர கடல் பகுதியில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்கத்து மாநில மீனவருடன் மோதல் போக்கை தவிர்க்கும் பொருட்டும் புதுச்சேரி காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அனைத்து மீனவர்களும் அப்பகுதிகளுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம் என புதுச்சேரி அரசு மீன் வளத்துறை அறிவுறுத்தியுள்ளார்கள்

புதுச்சேரி மாநிலத்தைச் சேர்ந்த மீன்பிடி விசை படகுகள் மூலம் மீனவர்கள் சமீபத்தில் சென்னை காசிமேடு பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்தபோது காசிமேடு மீனவர்களால் சிறைபிடிக்கப்பட்டு இரு மாநில அதிகாரியின் பேச்சு வார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டனர். இதனைத் தொடர்ந்து புதுச்சேரியில் பதிவு பெற்ற விசைப்படகுகள் மூலம் மீன்பிடிக்கும் மீனவர்கள் இனிவரும் காலங்களில் சுமுகமான சூழலில் மீன் பிடித்து தொழில் செய்வதற்கு உண்டான கலந்த ஆலோசனை கூட்டம் மீன்வளத்துறையில் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் மீன்வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் உள்ளிட்ட அதிகாரிகளும், மீனவர் சங்க நிர்வாகிகள், விசைப்படகு உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்டனர். இக்கூட்டத்தில் பேசிய மீன் வளத்துறை இயக்குனர் இஸ்மாயில் தற்போது சென்னை மற்றும் ஆந்திர கடல் பகுதியில் நிலவும் பதட்டமான சூழ்நிலையை கருத்தில் கொண்டு பக்கத்து மாநில மீனவருடன் மோதல் போக்கை தவிர்க்கும் பொருட்டு புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதியைச் சேர்ந்த அனைத்து பதிவுப்பற்ற விசைப்படகுகள் சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் ஆந்திர மாநில கடல் பகுதியில் மீன் பிடித்தலை தவிர்க்குமாறு அறிவுறுத்தினர்.

மேலும் புதுச்சேரி தமிழகம் மற்றும் ஆந்திராவில் உள்ள மீன்பிடி ஒழுங்குமுறை சட்ட விதிகளுக்கு உட்பட்டு மீன்பிடி தொழில் செய்ய வேண்டும் எனவும் இப்பிரச்சினைக்கு சுமூக தீர்வு காண தமிழகம் மற்றும் புதுச்சேரி சேர்ந்த அனைத்து கடலோர மாவட்டம் மீனவர்கள் மற்றும் அதிகாரிகளுக்கிடையே ஆலோசனை கூட்டம் நடத்த தமிழக மின்வளத் துறையிடம் வலியுறுத்தப்படும் என்றார்.

What do you think?

குண்டாஸ் வழக்கு பதியப்படும் என அறிவித்த காவல்துறையை கண்டித்து அனைத்து சாராயக்கடை உரிமையாளர்களும் உரிமத்தை சரண்டர்

புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகப்பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாளுக்காக பேனர் கட்டவுட் துணை மாவட்ட ஆட்சியரின் புகாரைத்தொடர்ந்து காவல் துறை வழக்குப்பதிவு