புதுச்சேரி அரசின் சுண்ணாம்பாறு படகு துறையில் கையாக், பனானா படகுகள் அறிமுகம்..
புதுச்சேரி அரசின் சுண்ணாம்பாறு படகு துறையில் கையாக், பனானா படகுகள் அறிமுகம்…குதுகலிக்கும் சுற்றுலா பயணிகள்...கோடையை யொட்டி அதிகாலை 5.30 மணிக்கே படகு துறை திறப்பு..சுற்றுலா வளர்ச்சி கழகம் ஏற்பாடு…
புதுச்சேரிக்கு வரும் சுற்றுலா பயணிகளை பெரிதும் ஈர்க்கும் இடமாக நோணாங்குப்பம் சுண்ணாம்பாறு படகு குழாம் உள்ளது. இங்குள்ள படகுகளில் பயணித்து பேரடைஸ் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகள் சென்று குளித்து மகிழ்கின்றனர். படகு குழாமில் சாதாரண நாட்களில் 500 முதல் ஆயிரம் பேரும், வாரவிடுமுறை நாட்களில் 3 ஆயிரம் பேரும் வந்து செல்கின்றனர்.
கடும் வெயில் காரணமாக சுற்றுலா பயணிகள் வரத்து குறைவாக இருந்தது.
விடுமுறை நாட்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிக அளவில் இருந்தது.
மேலும் கோடையை யொட்டி சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் விதமாக
அதிகாலை 5.30 மணி முதல் இந்த மாதம் முழுவதும் படகு துறை இயக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் கையாக்,பனானா படகுகள் அறிமுகப்படுத்தப்படிருப்பது சுற்றுலா பயணிகளை மகிழ்ச்சி படுத்தியுள்ளது. வாழைப்பழம் போன்ற ரப்பர் படகில் பாதுகாப்பு கவசத்துடன் பயணிகள் உட்கார்ந்து கொள்ள முன்னால் இஞ்சின் படகு இழுத்து செல்ல திர்லீங் அனுபவத்தை பெற்றதாக பயணிகள் தெரிவிக்கின்றனர்.
இது மட்டுமல்லாது வலை கிரிக்கெட், வீடியோ கேம் என விளையாட்டு போட்டிகளும் படகு துறை அமைக்கப்பட்டுள்ளன. ஆனால் கோடை வெயிலின் உக்ரம் காரணமாக பயணிகளின் எண்ணிக்கை குறைவாகவே உள்ளது…