புதுச்சேரி..கொலை நகரமானது புதுச்சேரி…மக்களுக்கு பாதுகாப்பு கொடுக்க முடியாத அமைச்சர்களுக்கு வெட்கமாக இல்லை..அசிங்கமா இல்லை.. முதல்வர்,கல்வி அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும்-நாராயணசாமி வலியுறுத்தல்…
மத்திய -மாநில அரசுகளை கண்டித்து புதுச்சேரி முழுவதும் காங்கிரஸ் கட்சி சார்பில் பாத யாத்திரை நடத்தப்படுகிறது.ஊசுடு தொகுதிக்குட்பட்ட சேதராப்பட்டு கிராமத்தில் இன்று துவங்கிய பாத யாத்திரைக்கு
தொகுதி பொறுப்பாளரான முன்னாள் எம்எல்ஏ கார்த்திகேயன் தலைமை ஏற்க முன்னாள் முதல்வர் நாராயணசாமி,காங்கிரஸ் தலைவர் வைத்தியலிங்கம் எம்பி, முன்னாள் அரசு கொறடா அனந்தராமன், முன்னாள் அமைச்சர் கந்தசாமி மற்றும் நிர்வாகிகளும் தொண்டர்களும் பங்கேற்றனர்.
சேதராபட்டில் துவங்கிய பாதை யாத்திரையானது கரசூர், துத்திப்பட்டு, தொண்டமாநத்தம், பத்துகண்ணு,கூடப்பாக்கம் ஆகிய கிராமங்கள் வழியே சென்று அடைந்தது.
பாத யாத்திரையின் போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, புதுச்சேரியில் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது.
கொலை நகரமாக புதுச்சேரி மாறி விட்டது.மக்களுக்கு பாதுகாப்பு இல்லை..புதுச்சேரியில் நாளுக்கு நாள் குற்றச்சம்பவங்கள் அதிகரிக்க துவங்கி விட்டது என்றார்.
நடக்கும் பாலியல் பலாத்தாரம் அரசால் மூடிக்க மறைக்க பார்க்கிறது.தவளகுப்பத்தில் சிறுமிக்கு நடந்த கொடுமைக்கு மக்கள் வெகுண்டு எழுந்துள்ளனர்.
மக்களுக்கு பாதுகாப்பு அளிக்க அரசு தவறிவிட்ட அமைச்சர்களுக்கு வெட்கமாக இல்லை..அசிங்கமா இல்லை..இதனால் முதல்வர் ரங்கசாமி,கல்வி அமைச்சர் தார்மீக பொறுப்பேற்று ராஜினாமா செய்ய வேண்டும்..ஆள தகுதியில்லாத அமைச்சர்கள் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் ..புதுச்சேரி அரசை காங் சும்மா விடாது..
அனைத்து அமைச்சர்களும் பதவி விலகும் வரை காங்கிரஸ் கட்சி போராடும் என முன்னாள் முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.