புதுச்சேரியில் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது
புதுச்சேரியில் கடந்த சில நாட்களாக வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டு மழையும் இல்லாமல் வெயிலும் இல்லாமல் இருக்கமான சூழ்நிலை காணப்பட்டு வந்தது.
இருப்பினும் கடந்த சில நாட்களாக கடுமையான அனல் காற்றுடன் சூழ்நிலை நிலவி வந்தது.
ஆனால் காலையிலிருந்து வானம் மேகமூட்டவுடன் காணப்பட்டு வந்த நிலையில் இன்று மாலையில் கருமேகங்கள் சூழ்ந்து குளிர்ச்சியான சூழல் காணப்பட்டு வந்தது.
இந்த நிலையில் இடி மின்னலுடன் கூடிய மிதமான பெய்து வருகிறது. இதனால் வெயிலில் அவதிப்பட்ட மக்கள் குளிர்ச்சியால் மகிழ்ச்சி அடைந்தனர்.
புதுச்சேரி நகர பகுதிகளான லாஸ்பேட்டை, முத்தியால்பேட்டை, சாரம், ராஜ்பவன், உள்ளிட்ட நகர பகுதிகளில் மழை பெய்தது
இதுபோன்று கிராமப்புறங்களான திருக்கனூர், மன்னாடிபட்டு, வில்லியனூர், சேதராப்பட்டு, பாகூர், உள்ளிட்ட பகுதிகளிலும் இடி மின்னலுடன் மிதமான மழை பெய்து வருகிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பாதசாரிகள் சிலர் குடைகளை பிடித்த படியும் சிலர் மழையில் நனைந்த படியுமே சென்றனர்.
கிராமப்புறங்களில் தொடர்ந்து மிதமான மழை நீடித்து வருவதால் அறுவடைக்கு தயாரான நிலையில் இருந்த ஆயிரம் ஏக்கர் நெற்பயிர்கள் மழையில் நனைந்து சேதம் ஆனது இதனால் விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.
கிராமப்புறமான வம்புப்பட்டு, விநாயகம்பட்டு, சோரப்பட்டு, உள்ளிட்ட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் பயிரிடப்பட்டிருந்த 1000 ஏக்கர் நெற்பயிர்களும் முழுவதும் சேதம் அடையும் என விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.