புதுச்சேரி..ஜாலி ஹோம்ஸ் நிறுவனம் புருனே இயக்கிய திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது
Your backers நிறுவனத்தின் சார்பில் கிருஷ்ணராஜூ நடிக்க புதுச்சேரி ஜாலி ஹோம்ஸ் நிறுவனர் புருனே இயக்கிய மனிதம் என்ற புதிய திரைப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது.புதுச்சேரியை சேர்ந்த 100 கலைஞர்கள் கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் இசை வெளியீட்டு விழா புதுச்சேரியில் நடைபெற்றது.விழாவில் இயக்குனர்கள் பாக்கியராஜ்,R.V. உதயகுமார்,அரவிந்தராஜ்,இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவா ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று இசையை வெளியிட்டனர்.
நிகழ்ச்சியில் பேசிய இயக்குனர் R.V.உதயகுமார் பேசுகையில்,
இப்படத்தின் இசை அமைப்பாளர் ஸ்ரீகாந்த் தேவாவின் இசையை வெகுவாக பாராட்டினார். திருப்பாச்சி…சிவகாசி…இரு படங்களின் பாடல்கள்தான் விஜய்யை மாஸ் ஹீரோவாக்கியது..
இரு படங்கள் இல்லையென்றால் விஜய் கட்சியே ஆரம்பித்து இருக்க முடியாது.இதற்கு எனது தம்பி விஜய் கோபித்து கொள்ள மாட்டார் என குறிப்பிட்டார்