in

புதுச்சேரி மொழியாசிரியர் கல்வி துறை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம்..

புதுச்சேரி மொழியாசிரியர் கல்வி துறை வளாகத்திற்குள் உள்ளிருப்பு போராட்டம்..

 

பணியிட மாற்றல் கலந்தாய்வை புறக்கணிப்பு..பணியிட மாற்றல் கொள்கை காலாவதியானதால் புதிய திட்டம் உருவாக்கி பணியிட மாற்றம் கொண்டு வர வலியுறுத்தல்..தமிழ் பாடத்தேர்வின் போது கலந்தாய்வை நடத்திய கல்வி துறை..

புதுச்சேரிஅரசின் கல்வித்துறை சார்பில் பட்டதாரி மொழி ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு இன்று நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

இன்று காலை கல்வித்துறை வளாகத்தில் கலந்தாய்வு துவங்கியது கலந்தாய்வில் 100க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் பங்கேற்றனர். அப்போது ஆசிரியர்கள் இடமாறுதலுக்கு கோரிய இடங்கள் மறுக்கப்பட்டது.

ஒப்பந்த அடிப்படையில் சில பள்ளிகளில் ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டிருந்ததால் காலி இடங்களாக கல்வித்துறை தெரிவிக்கவில்லை. அதோடு, 57 வயது கணக்கீடை கடந்த ஆண்டு டிசம்பர் 31ம் தேதியாக கணக்கிட்டனர். இதற்கு கலந்தாய்வில் பங்கேற்ற ஆசிரியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். அவர்கள் கலந்தாய்வை புறக்கணித்து கல்வித்துறை கருத்தரங்கு அறையில் அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் கலந்தாய்வை நடத்த வந்த கல்வித் துறை அதிகாரிகள் அங்கிருந்து வெளியேறினார்கள்.

புதிய சீனியாரிட்டி பட்டியலை வெளியிட வேண்டும். புதிய இடமாறுதல் கொள்கை வெளியிட வேண்டும் என்பது உட்பட கோரிக்கைகளை வலியுறுத்தி தர்ணா போராட்டத்தை நடத்தினர். இதனால் கல்வித்துறை வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

கலந்தாய்வு அழைக்கப்பட்ட இன்றைய தினத்தில் அரசுப் பள்ளிகளில் இன்று தமிழ் மொழி பாடத் தேர்வு. தேர்வுக்கு செல்ல வேண்டிய ஆசிரியர்கள் கலந்தாய்விற்கு வந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பிற மொழி ஆசிரியர்களை கொண்டு இன்று தேர்வு நடத்தப்பட்டது

What do you think?

ஆரியம் மட்டுமல்ல காவியும் அலற கூடிய நிலையில் உள்ளது கி வீரமணி பேச்சு

விடுதலை சிறுத்தை கட்சியின் தலைவர் தொல் திருமாவளவனுக்கு பிடிவாரண்ட்..