in

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனி அரசாங்கம்

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனி அரசாங்கம்

 

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் தனி அரசாங்கம் நடத்தி முதல்வர் ரங்கசாமிக்கு தெரியாமல் உத்தரவிடுவது ஜனநாயகத்துக்கு எதிரானது என்று முன்னாள் முதல்வர் நாராயணசாமி குற்றம் சாட்டியுள்ளார்.

புதுச்சேரியில் உள்ள தனது இல்லத்தில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் முதல்வர் நாராயணசாமி, துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் அரசு அதிகாரிகள் கூட்டம் நடத்தி தனிப்பட்ட உத்தரவுகளை பிறப்பிக்க அதிகாரம் இல்லை. அரசு நிர்வாகத்தை தனது கையில் எடுத்து அதிகாரிகளுக்கு ஆளுநர் உத்தரவு பிறப்பிக்கிறார்.

கிரண் பேடியின் செயல்பாடுபோல் தற்போதைய ஆளுநர் செயல்பாடும் உள்ளது. இது உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு எதிரானது. ஆளுநர் கைலாஷ்நாதன் தனி அரசாங்கம் நடத்துகிறார். முதல்வர் ரங்கசாமிக்கு தெரியாமல் உத்தரவிடுவது ஜனநாயகத்துக்கும், அரசியமைப்பு சட்டத்துக்கும் எதிரானது. முதல்வர், அமைச்சர்களை உதாசீனப்படுத்துகிறார். தங்கள் பதவியையும், நாற்காலியையும் காப்பாற்ற முதல்வர், அமைச்சர்கள் வாய்மூடி டம்மி அரசு நடத்துகின்றனர் என்றார்.

விதிமீறி கோப்புகள் அனுப்பிவிட்டு அதிகாரிகளை குறைகூறி தப்பிக்க முதல்வர் முயல்கிறார். நிர்வாகத்தை தலைமை வகித்து நடத்தும் முதல்வர் ரங்கசாமி அதிகாரிகளை குறை கூறமுடியாது. அது தன்னைதானே குறை கூறுவதற்கு இணையாகும் என தெரிவித்தார்.

சுற்றுலா பயணிகள், மாணவர்களை குறிவைத்து கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. அந்த காவல் நிலையங்களுக்கு தெரிந்தே கஞ்சா விற்பனை செய்யப்படுகிறது. இந்த ஆட்சியில் இருப்பவர்களுக்கு கஞ்சா விற்பனையை தடுக்க வேண்டும் என்றால் எந்த காவல்நிலைய சரகத்தில் கஞ்சா விற்பது பிடிக்கப்பட்டால் அந்த காவல்நிலையத்தின் அதிகாரியை இடமாற்றம் செய்ய முடியுமா என்று கேள்வி எழுப்பினார்.

What do you think?

தூய இஞ்ஞாசியார் கல்வியல் கல்லூரியில் பாரம்பரிய உணவுத் திருவிழா

திருக்கோஷ்டியூர் அருள்மிகு ஸ்ரீ சுவாமி நாராயண பெருமாள் திருக்கோவில் மாசி மக பெருவிழா