in

புதுச்சேரி…உறுப்பு தானத் துறையில் நவீன வசதிகள் ஏழைகளைச் சென்றடையும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்

புதுச்சேரி…உறுப்பு தானத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வசதிகள் நாடெங்கிலும் உள்ள ஏழைகளைச் சென்றடையும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்…துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன்.

புதுச்சேரி அடுத்த தவளக்குப்பம், அரவிந்தர் கண் மருத்துவமனையின் அரவிந்தர் கண் வங்கி மையத்தின் சார்பில் 39வது தேசிய கண் தான இருவார விழா மருத்துவமனை கலையரங்கத்தில் நடைபெற்றது. துணைிநலை ஆளுநர் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு கண்தானத்தை ஊக்குவிப்பதில் சிறப்பாக செயல்படுவோருக்கு விருதுகள் வழங்கி கௌரவித்தார்.

நிகழ்ச்சியில் இந்திராகாந்தி மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் கண்மருத்துவத் துறையின் தலைவர் பேராசிரியர் எழில்வதனி துணைநிலை ஆளுநரின் செயலர் திரு நெடுஞ்செழியன், அரவிந்தர் கண் மருத்துவமனையின் சமுதாய விழிப்புணர்வு திட்ட தலைவர் டாக்டர் தயாகர் யாதல்லா, மருத்துவ அதிகாரிகள், செவிலியர்கள், தன்னார்வலர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்ச்சியில் பேசிய துணைநிலை ஆளுநர்,பாரதப் பிரதமரின் ஜன் ஆரோக்கியா திட்டம் ஏழை-எளிய மக்களுக்கு சுகாதார உத்தரவாதத்தை அளித்திருக்கிறது. அதே வேளையில், உறுப்பு தானத் துறையில் ஏற்பட்டுள்ள நவீன வசதிகள் நாடெங்கிலும் உள்ள ஏழைகளைச் சென்றடையும் வகையில் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும்.என்று தெரிவித்தார்.

பேட்டி…. கைலாஷ்நாதன்… துணை நிலை ஆளுநர்.

துணைநிலை ஆளுநர் பங்கேற்ற விழாவில் அரவிந்தர் கண் மருத்துவமனையில் பணி புரியும் செவிலியர்களை தரையில் அமரவைத்தனர்…தன்னார்வலர்கள் நாற்காலியில் அமர்ந்து நிகழ்ச்சி பார்த்திருந்த நிலையில் செவிலியர்களை மட்டும் தரையில் அமர்த்தியது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது….

What do you think?

புதுச்சேரியில் இளம் பெண்ணின் வயிற்றில் இருந்து 1.5 கிலோ எடையுள்ள தலை முடியை வெற்றிகரமாக அகற்றி தனியார் மருத்துவமனை மருத்துவர்கள்

வீதியில் கிரிக்கெட் விளையாடிய சிறுவர்கள் வீட்டுக்குள் விழுந்த கிரிக்கெட் பந்து கிரிக்கெட் பந்து விழுந்து பெண்ணுக்கு சிறு காயம் போலீசில் புகார்