in ,

புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் 41-ம் ஆண்டு செடல் உற்சவம்

புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் 41-ம் ஆண்டு செடல் உற்சவம்

 

புதுச்சேரி நைனார்மண்டபம் நாகமுத்து மாரியம்மன் கோவில் 41-ம் ஆண்டு செடல் உற்சவத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு அலகுக்குத்தி தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.

கனரக வாகனங்களை அலகுக்குத்தி பக்தர்கள் இழுத்தது அனைவரும் மெய்சிலிர்க்கவைத்தது.

புதுச்சேரி முதலியார்பேட்டை நைனார்மண்டபத்தில் பிரசித்திபெற்ற அருள்மிகு நாகமுத்து மாரியம்மன் கோவில் உள்ளது . இக்கோவிலின் 41-ஆம் ஆண்டு செடல் விழா கடந்த 11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதனை தொடர்ந்து தினமும் அம்மன் பல்வேறு வாகனங்களில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்றது.

முக்கிய நிகழ்ச்சியான செடல் உற்சவம் மற்றும் தேர்பவனி இன்று வெகு சிறப்பாக நடைபெற்றது .

அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் அம்மன் வைக்கப்பட்டு முக்கிய வீதிகளில் வலம் வந்தது. முன்னதாக ஆயிரகணக்கான பக்தர்கள் தங்களது உடலில் அலகு குத்தியும், கார், வேன், லாரி, பேருந்து உள்ளிட்ட கனரக வாகனங்களை அலகு குத்தி இழுத்து நேர்த்தி கடன் செலுத்தினர். இது பக்தர்களை மெய்சிலிர்க்கவைத்தது.

கோவிலின் செடல் திருவிழாவையொட்டி புதுச்சேரி கடலூர் சாலையில் போக்குவரத்து மாற்று பாதியில் திருப்பிவிடப்பட்டது. விழாவில் ஆயிரக்கணக்கான பொதுமக்கள், பக்தர்கள் கலந்துகொண்டு சாமியை தரிசனம் செய்து சென்றனர்.

.செடல் திருவிழாவையொட்டி ஏராளமான போலீஸ் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

What do you think?

புதுச்சேரியில் தமிழக வெற்றிக்கழகப்பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் பிறந்த நாளுக்காக பேனர் கட்டவுட் துணை மாவட்ட ஆட்சியரின் புகாரைத்தொடர்ந்து காவல் துறை வழக்குப்பதிவு

திருத்துறைப்பூண்டியில் ஒரே நேரத்தில் 6 வீடுகள் தீப்பிடித்து எரிந்து சேதம்