in

புதுச்சேரி..பதப்படுத்தப்பட்ட உணவு,சிவப்பு இறைச்சி,எண்ணையில் பொறித்த உணவு ஆகியவை தான் புற்றுநோய்க்கு காரணம்

புதுச்சேரி..பதப்படுத்தப்பட்ட உணவு,சிவப்பு இறைச்சி,எண்ணையில் பொறித்த உணவு ஆகியவை தான் புற்றுநோய்க்கு காரணமாக விளங்குகின்றன…ஜிப்மர் மருத்துவர் எச்சரிக்கை…

பாரதிதாசன் அரசு மகளிர் கல்லூரியில் மன இயல் துறை சார்பில் ஊட்டச்சத்து வார விழா நடைபெற்றது. இதில் பள்ளியின் கல்லூரி மாணவியர் ஊட்டச்சத்தை விளக்க வகையில் கண்காட்சியும் ஊட்டச்சத்துடன் கூடிய உணவுகளை காட்சிக்கும் வைத்தனர்.

கண்காட்சியை ஜிப்மர் மருத்துவமனையின் புற்றுநோய் மருத்துவத் துறையின் பிசுவாஜித் துபாசி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு துவக்கி வைத்தார்.நிகழ்ச்சியில் பேசிய அவர் இந்தியாவில் புற்றுநோய் அதிகரித்து வருகிறது இதற்கு முக்கிய காரணம் உணவு பழக்கவழக்கம்தான்.இந்தியாவில் அதிக அளவில் பெண்களுக்கு மார்பக புற்றுநோயும் ஆண்களுக்கு வாய் புற்றுநோய்,நுரையீரல் புற்றுநோய், பெருங்குடல் புற்றுநோய் ஆகியவை அதிகளவில் காணப்படுகிறது.

இந்தப் புற்று நோய்கள் அனைத்தும் தினசரி பழக்கவழக்கத்தினால் வருகிறது இதனை நிச்சயமாக தடுக்க முடியும் என்றார்.புற்று நோய்களுக்கு முக்கிய காரணமாக இருப்பது உடல் பருமன்.பதப்படுத்தப்பட்ட உணவு,சிவப்பு இறைச்சி,எண்ணையில் பொறித்த உணவு ஆகியவை தான் உடல் பருமனுக்கு முக்கிய காரணமாக விளங்குகிறது.இவை மூன்றும் தான் புற்றுநோய்க்கு காரணமாக விளங்குகின்றன எனவும் மருத்துவர் தெரிவித்தார்.

What do you think?

ராகுல்காந்திக்கு கொலை மிரட்டல் விடுத்த பாஜகவினர் மீது வழக்குப்பதிவு

வில்லியனூர் ஸ்ரீ தென்கலை வரதராஜ பெருமாள் ஆலயத்தின் தங்கத்தேரின் மரத்தேர் வெள்ளோட்டம்